இளையராஜா பர்த்டே பார்ட்டி.. ரஜினிகாந்த்தை போதையில் அடித்தாரா பாரதிராஜா?.. அதிர்ச்சி கிளப்பிய பிரபலம்

சென்னை: ரஜினிகாந்த் இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் படம் வெற்றியையும், கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியையும் சந்தித்தன. தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தை இளையராஜாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பாரதிராஜா அறைந்துவிட்டதாக பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

Journalist Anthanan Talks about Rajinikanth And Bharathiraja At Latest Interview

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.

பக்குவப்பட்ட ரஜினிகாந்த்: ரஜினி இப்போது பக்குவப்பட்டவராக காட்சியளிக்கிறார். தான் வளர்ந்துவந்த காலத்தில் ரொம்பவே முரட்டுத்தனமானவர் என்ற ஒரு பேச்சு உண்டு. இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "நடிகர் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் வீட்டில் ஒருமுறை இளையராஜாவின் பிறந்தநாள் பார்ட்டி கோலாகலமாக நடந்தது. அதில் பலரும் கலந்துகொண்டார்கள்.

அடித்த பாரதிராஜா: அந்தப் பார்ட்டிக்கு ரஜினிகாந்த் தாமதமாக வந்தார். அப்போது ஏன் டா லேட்டு என ரஜினியிடம் பாரதிராஜா கேட்டிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் நக்கலாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். உடனே பாரதிராஜாவுக்கு கோபம் வந்து ரஜினிகாந்த்தை கன்னத்திலேயே அறைந்துவிட்டார். அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்று முதல் குடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்த இளையராஜா அதற்கு பிறகு மது அருந்துவதையே நிறுத்திவிட்டார்.

இதெல்லாம் வருமா?: இப்படி ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அதனையெல்லாம் சரியாக இளையராஜாவின் பயோபிக்கில் வைத்தால் நன்றாகவே கவனம் பெறும். ஆனால் சர்ச்சையை தொடாமல் இளையராஜாவை போற்றும்படி தனுஷ் படமாக வந்தால் கண்டுகொள்ளமாட்டார்கள்" என்றார். முன்னதாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படமானது அடுத்த வருடம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X