Rajini - பத்திரிகையாளர் சொன்ன ஒரு வார்த்தை.. மன உளைச்சலுக்கு ஆளான ரஜினிகாந்த்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) பத்திரிகையாளர் சொன்ன வார்த்தையால் ரஜினிகாந்த் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான சம்பவம் தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு தன்னுடைய தனித்துவமான ஸ்டைலாலும், திறமையாலும் அடையாளப்பட்டவரும் அவரே. அவரது பெயரை கேட்டாலே சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய தாக்கத்தை அனைத்து தலைமுறைகளிடமும் செலுத்தியிருக்கிறார் அவர்.

 Journalist Bismi Shares his Experience With Rajinikanth

போராட்டம்: ரஜினிகாந்த் இன்று தனக்கென பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தாலும் ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். ஒரு முட்டைக்காக அசிங்கப்பட்ட வரலாறு எல்லாம் அவரது வாழ்க்கையில் உண்டு. அதனை அவரே பல மேடைகளில் சொல்லவும் செய்திருக்கிறார். இருந்தாலும் அந்த கஷ்டங்களையும், அசிங்கங்களையும் கண்டு ஓடாமல் எதிர்த்து நின்றவர் சூப்பர் ஸ்டார்.

ஜெயிலர்: அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதுமட்டுமின்றி ரஜினிக்கு கலாநிதி மாறன் பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அதனை வாங்கிக்கொண்ட ரஜினி, இப்போதுதான் பணக்காரனாக உணர்கிறேன் என கூறினார்.

ஏனெனில் எந்த தயாரிப்பாளரும் ரஜினிக்கு கார் பரிசாக வழங்கியதில்லை. அதேபோல் ஒரு படத்தில் நடித்தபோது காரில் செல்லவா என கேட்டதற்காகவும் அசிங்கப்படுத்தப்பட்டவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் அடுத்ததாக தலைவர் 170 படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படமும் வெளியாகவிருக்கின்றன. ஜெயிலர் போலவே இந்தப் படங்களும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

மன உளைச்சல்: ரஜினியை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை பட்டென பேசிவிடுபவர். அதனாலேயே அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டதுண்டு. காலம் செல்ல செல்ல தன்னை பக்குவப்படுத்திக்கொண்டார் ரஜினிகாந்த். இந்த சூழலில் பத்திரிகையாளர் சொன்ன ஒரு வார்த்தையால் ரஜினிகாந்த் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம்.

என்ன நடந்தது?: அதாவது சில வருடங்களுக்கு முன்பு ரஜினியின் மனைவி லதா நடத்தும் பள்ளியின் வாகன் ஓட்டுநர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை; அதனாதல் அவர்கள் எல்லோரும் ஸ்ட்ரைக் செய்கிறார்கள் என்ற தகவல் பத்திரிகையாளர் பிஸ்மிக்கு வந்ததாம். அவரும் அது உண்மைதானா என விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டாராம்.

பிறகு ஒரு வீடியோவில் இந்த விவகாரம் குறித்து பேசியபோது பிஸ்மி, 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து நாட்டை திருத்துறேனு சொல்றாரு. முதலில் அவர் மனைவி நடந்த்தும் ஸ்கூலை திருத்தட்டும்' என சொல்லிவிட்டாராம். இந்த வீடியோ எப்படியோ ரஜினியின் கண்களுக்கு பட; அவர் உடனடியாக தனது பிஆர்ஓவுக்கு ஃபோன் செய்து ஏன் இவங்க இப்படி பேசுறாங்க. என்ன மோட்டிவ் இவங்களுக்கு. நான் ரொம்ப வருத்தப்பட்டதா சொல்லுங்க என்றாராம்.

அந்த பிஆர் ஓவும் பிஸ்மியை தொடர்புகொண்டு உங்கள் வீடியோவை பார்த்து ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என்று கூறினாராம். அதேபோல் ரஜினியின் மகள்களும் பிஆர்ஓவை தொடர்புகொண்டு அப்பாவுக்கு என்ன வீடியோ அனுப்புனீங்க? நைட் ஃபுல்லா மன உளைச்சலிலேயே இருந்தாரு என்று கூறினார்களாம். இந்தத் தகவலை பிஸ்மியே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X