விஜய்யை கலாய்த்த பத்திரிகையாளர்?.. துணை எஸ்.ஏ.சந்திரசேகர் வேறயா.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: விஜய் இப்போது அடுத்த சூப்பர் ஸ்டாரா என்ற கேள்விக்குள் வந்துவிட்டார். அவரது படங்கள் விமர்சன ரீதியாக பின்னடவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்புகின்றன. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக தாண்டின. அவர் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்தச் சூழலில் விஜய் பற்றி பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கடந்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.
கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் இப்போதோ,ஹெச். வினோத் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; அப்படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் விஜய்க்கு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், " ஒருமுறை எஸ்.ஏ.சி என்னை அழைத்து எனது மகன் ரொம்ப கூச்சப்படுகிறார். அதை எப்படியாவது போக்க வேண்டும் என்று சொன்னார். நான் உடனே நாளை விஜய்யை பேட்டி எடுக்க வருகிறேன் என்று கூறி விஜய்யின் ஆஃபிஸுக்கு சென்றேன்.
விழி பிதுங்கிய விஜய்: அந்தப் பேட்டியில் நான் பிஸ்மியிடம் ஏதேதோ கேள்விகளை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து விழி பிதுங்கி நின்றார். அதை வைத்து விஜய்யை கொஞ்சமாக நக்கல் அடித்தேன். விஜய்யும் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார். அன்றிருந்து நான் பேட்டி எடுக்க சென்றால் விஜய்க்கு கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











