அஜித்துக்கே விபூதி அடித்த நவரச நாயகன் கார்த்திக்.. ஏகேவும் சும்மா இல்ல.. பழிவாங்கிட்டாரே
சென்னை: 90களின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த கார்த்திக் இப்போது திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். ஆனால் அண்மையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் கொடுத்த பேட்டியின் காரணமாக மீண்டும் நவரச நாயகன் ட்ரெண்டாகியிருக்கிறார். சோஷியல் மீடியாவில் பலரும் அவர் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்திக் ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். நவரச நாயகன் என்று கொண்டாடப்படும் அவர் பல பெண்களுக்கு க்ரஷ்ஷாகவும் இருந்தார். சுருக்கமாக சொல்லப்போனால் 90களின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அவர். சாக்லேட் பாயாக மட்டுமின்றி அமரன், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்து வெரைட்டி காண்பித்தார்.
சுற்றிய சர்ச்சைகள்: 2000களின் பிற்பகுதியில் எப்படி, 'சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார். இஷ்டத்துக்கு வந்து நடிப்பார். ஆனால் வந்துவிட்டால் ஒரே டேக்கில் எத்தனை பெரிய காட்சியாக இருந்தாலும் நடித்துவிடுவார்' என்று சொல்லப்பட்டதோ அதேபோல்தான் 90களில் கார்த்திக்கை சொல்வார்கள். கால்ஷீட் கொடுத்துவிட்டு மாலை லைட்டெல்லாம் போன பிறகு ஷூட்டுக்கு வருவதை பழக்கமாகவே வைத்திருந்தார். இதனால்தான் அவரது மார்க்கெட் டப்பென்று கீழே விழுந்துவிட்டதாகவும் பேச்சு உண்டு.

பாரதி கண்ணன் பேட்டி: இப்போது திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இடையில் சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்தச் சூழலில் மீண்டும் கடந்த சில நாட்களில் சோஷியல் மீடியா எங்கும் அவர் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் செய்த சம்பவம் அப்படி. கார்த்திக் மாதிரியே மிமிக்ரி செய்து அவர் செய்த சேட்டைகளை வெளியில் போட்டு உடைத்துவிட்டார்.
செய்யாறு பாலு வீடியோ: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கேரக்டருக்கு முதலில் கார்த்திக்கைதான் ஃபிக்ஸ் செய்வதாக இருந்தார் கௌதம் மேனன். அஜித்திடம் சென்று கதை சொன்ன பிறகு இந்த வில்லன் ரோல் யார் செய்யப்போகிறார் என அவர் கேட்க; கார்த்திக் என்று கௌதம் சொன்னார்.
ஏகே எடுத்த முடிவு: அதற்கு அஜித்தோ, இது ரொம்ப வெயிட்டான ரோல். கார்த்திக் வேண்டாமே என்று கூற; கௌதம் மேனனும் கார்த்திக்கிற்கு பதிலாக் அருண் விஜய்யை நடிக்க வைத்தார். இதற்கெல்லாம் காரணம் முன்னர் நடந்த சம்பவம்தான் காரணம். அதாவது ஆனந்த பூங்காற்றே படத்தில் கார்த்திக்குடன் நடித்தார் அஜித். அப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பு அஜித்துக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.
கார்த்திக் செய்த செயல்: உடனே கார்த்திக்கோ அஜித்துக்கு பதிலாக பிரசாந்த்தை இதில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லி தியாகராஜனிடமும் நேரடியாக பேசிவிட்டார். இதற்கிடையே தன்னை வைத்து விளம்பரம் செய்துவிட்டு இப்போது வேறு ஹீரோவை நடிக்கவைத்தால் என்னுடைய கரியர் போய்விடும் என அஜித் சொல்லி; ஒரே மாதத்தில் பூரண நலம் பெற்று அந்தப் படத்தில் நடித்தார். தனக்கு பதிலாக பிரசாந்த்தை நடிக்க வைக்க கார்த்திக் எடுத்த முயற்சி பின்னர்தான் அஜித்துக்கு தெரியவந்ததுதான். அதனால்தான் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











