Disco Shanthi - பார்சலில் வந்த உள்ளாடைகள்.. கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: Disco Shanthi (டிஸ்கோ சாந்தி) பிரபல கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்திக்கு பார்சலில் உள்ளாடைகள் வந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

டிஸ்கோ சாந்தி தற்போதைய தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சிஎல் ஆனந்தனுக்கு மகளாக பிறந்தார். அவரது தந்தை சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்தவர். சாந்திக்கு லலிதா குமாரி என்ற சகோதரியும் இருக்கிறார். அவரும் ஒரு நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Journalist Cheyyaru balu opens up about Actress Disco Shanthi

சினிமாவில் அறிமுகம்: சாந்தி 1986ஆம் ஆண்டு உதய கீதம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும், தனது நடிப்புத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற நம்பிக்கையில் சாந்தி சில திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. 1985 முதல் 1996 வரையிலான 11 வருட வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஒரியா என பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சாந்தி.

சாந்திக்கு திருமணம்: டிஸ்கோ சாந்தி 1996ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரான ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டார். ஒருமுறை கோயிலுக்கு சென்று இருவரும் சாமி கும்பிடும்போது ஸ்ரீஹரி தாலி கட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பத்தை பொறுப்புடன் கவனித்துவந்தார். இந்த தம்பதிக்கு, அக்ஷரா ஸ்ரீஹரி என்ற மகளும், ஷஷாங்க் ஸ்ரீஹரி, மேகம்ஷ் ஸ்ரீஹரி என்ற மகனும் உள்ளனர்.

இதில், அவரது மகள் அக்ஷரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருந்தபோது இறந்துவிட்டார். மகளின் நினைவாக அவரது குடும்பத்தினர் பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்கு ஃபுளூரைடு இல்லாத தண்ணீர் வழங்கி உதவ அக்ஷரா அறக்கட்டளையை நிறுவி நான்கு கிராமங்களை தத்தெடுத்தனர்.

கணவர் மரணம்: ஸ்ரீஹரி 2013ஆம் ஆண்டு "ராம்போ ராஜ்குமார்" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார். சாந்திக்கும் கல்லீரல் கோளாறு இருந்தது, இதற்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளித்து அவர் உடல்நலம் தேறினார். இந்தி திரைப்படமான ஆடங்க் திரைப்படம்தான், திருமணத்திற்கு முன் சாந்தி, கடைசியாக நடித்த படம். இந்தச் சூழலில் அவரது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் தெரியவந்திருக்கிறது.

Journalist Cheyyaru balu opens up about Actress Disco Shanthi

மோகன்லால் படத்தில்: அதாவது, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடிக்கொண்டிருந்த டிஸ்கோ சாந்திக்கு மோகன் லால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்ட்யூம் ரொம்பவே சின்னதாகவும், டூ பீஸ் என்ற வகையிலும் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிஸ்கோ சாந்தி படத்தின் இயக்குநரிடம் வேறு உடையை தாருங்கள் என கேட்டு வாங்கி அணிந்திருக்கிறார். அந்த உடை சராசரி கவர்ச்சி அளவில் இருந்திருக்கிறது.

பார்சலில் வந்த உள்ளாடைகள்: அதேபோல் டிஸ்கோ சாந்தி காலத்தில் சில பத்திரிகைகள் அவரை பற்றியும், மற்ற கவர்ச்சி நடிகைகள் குறித்தும் பொய்யான செய்திகளை எழுதி வேறு ஒரு பிம்பத்தை உருவாக்குமாம். இதன் காரணமாக அவர்கள் வெளியில் சென்றால் மற்றவர்களின் பார்வையே தவறாகத்தான் இருக்குமாம். அப்படி ஒரு சமயம் டிஸ்கோ சாந்திக்கு யாரோ ஒருவர் பார்சலில் உள்ளாடைகளை அனுப்பி வைத்தாராம். ஆனால் அதை கண்டு கோபப்படாத டிஸ்கோ சாந்தி,அதை கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X