சார் என் வாழ்க்கையே போயிடும் சார்.. தயாரிப்பாளரிடம் கெஞ்சிய அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: Ajithkumar (அஜித்குமார்) நடிகர் அஜித் தன்னுடைய வாழ்க்கையே போய்விடும் என தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். யாருடைய துணையும் இல்லாம் திறமையின் துணிவோடு வந்த அஜித் இன்று தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். இதுவரை 61 படங்களில் நடித்திருக்கும் அஜித் சரிக்கு பாதி தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முன்னேறி வந்தவர்.

Journalist Cheyyaru Balu Reveals about Ajiths Unknown Side

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது அத்திரைப்படம். இதனையடுத்து அவர் தனது 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜர் பைஜானில் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அஜர் பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்து துபாயில் ஷூட்டிங் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல பிரச்னைகள்: அஜித்தை பொறுத்தவரை அவரத் கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தவர். குறிப்பாக ரேஸில் அதீத ஆர்வம் கொண்ட அவர் பல போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். தற்போது ரேஸிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டாலும் பைக் ரைடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில்கூட வளைகுடா நாடுகளில் தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

முதுகில் பிரச்னை: அஜித்குமார் ரேஸில் ஆர்வமாக இருந்தபோது ஏகப்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அவருக்கு பல அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றிருக்கின்றன. எனவே அவரது முதுகிலும், உடம்பிலும் பல காயங்கள் உண்டு என்று பேசப்படுவதுண்டு. முக்கியமாக அவருக்கு முதுகு வலி கடுமையாக ஏற்படும் அதனால் ஷூட்டிங்கில் ரொம்பவே சிரமப்படுவார் என்று அவருடன் பணியாற்றியவர்களும் சொல்வதுண்டு.

பிரேக் எடுக்கும் அஜித்: இந்த சூழலில் தனது முதுகு வலியால் இரண்டு படங்களில் அஜித்துக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ராஜ்கபூர் இயக்கத்தில் உருவான அவள் வருவாளா படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித்துக்கு கடும் முதுகு வலியாம். இயக்குநரிடம் சென்ற அவர், டைரக்டர் சார் கொஞ்சம் பிரேக் கிடைக்குமா என்று கேட்டுவிட்டு தனியாக சென்று முதுகு வலிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெத்தையில் சிறிது நேரம் படுத்து முதுகு வலியை சரி செய்துகொண்டு வருவாராம்.

கெஞ்சிய அஜித்: அதேபோல் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித் கமிட்டாகியிருந்த சமயத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவு முதுகு வலி வந்ததாம். அதனால் மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆகிவிட்டாராம். அதேசமயம் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாம் படக்குழு. அஜித் மருத்துவமனையில் அட்மிட் ஆனதை தெரிந்துகொண்ட தயாரிப்பாளர் ஆனந்த பூங்காற்றே விளம்பரத்திலிருந்து அஜித்தின் பெயரையும் புகைப்படத்தையும் தூக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை வைத்து விளம்பரம் செய்துவிட்டாராம்.

இதனை அறிந்து பதறிப்போன அஜித்குமார் தயாரிப்பாளரிடம் சென்று, சார் இந்த படத்தில் என்னை கமிட் செய்துவிட்டு தூக்கிவிட்டால் எனது வாழ்க்கையே போய்விடும் சார்’ என கெஞ்சினாராம். அதனை பார்த்து மனம் இறங்கிய தயாரிப்பாளர் மீண்டும் அஜித்தை ஹீரோவாக போட்டாராம். அஜித்தும் உடனடியாக தனது உடல்நிலையை தேற்றிக்கொண்டு அந்தப் படத்தில் நடித்து முடித்தாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X