பாலியல் தொல்லை.. விசித்திரா இல்லாமல் இன்னொரு நடிகையும் அனுபவித்தாராம்.. பாலகிருஷ்ணா மறுபக்கம் இதுவா?
சென்னை: Balakrishna (பாலகிருஷ்ணா) பாலகிருஷ்ணாவால் விசித்திரா மட்டுமில்லை இன்னொரு நடிகையும் பாலியல் தொல்லையை அனுபவித்திருக்கிறாராம்.
நடிகை விசித்திரா தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். காமெடி மற்றும் கிளாமர் ரோல்களில் நடித்துவந்தார். ஆனால் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பல வருடங்கள் ஒதுங்கியே இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

பிக்பாஸ் 7: தற்போது பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார் விசித்திரா. அந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பூகம்ப டாஸ்க்கில் விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதற்காக முதல் நாள் சென்றேன்.
ரூமுக்கு அழைத்தார்: ஆனால் அவரோ என் பெயரைக்கூட கேட்காமல் இன்னைக்கு நைட் என் ரூமுக்கு வந்துடு என்றார். நான் அன்றைய இரவு அவர் ரூமுக்கு செல்லாமல் என்னுடைய ரூமுக்கு வந்து தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு அவருடைய ஆட்கள் மது அருந்திவிட்டு வந்து எனது அறையை தட்டினார்கள். இதனை கவனித்துக்கொண்டிருந்த அந்த ஹோட்டலின் மேனேஜர் (தற்போது விசித்திராவின் கணவர்) எனக்கு உதவி செய்தார்.
கன்னத்தில் அறை: அதன்படி அவர் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார். அதனால் நான் எந்த ரூமில் இருக்கிறேன் என ஹீரோவுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தெரியவில்லை. இதுவும் ஹீரோவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த சமயத்தில் ஆக்ஷன் காட்சி ஷூட் செய்யப்பட்டது. அந்த ஷூட்டிங்கில் சண்டை கலைஞர் ஒருவர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் சண்டை பயிற்சியாளரிடம் சென்றுமுறையிட்டேன். அவர் என்னை அறைந்துவிட்டார்" என்றார்.
பாலகிருஷ்ணா: விசித்திரா சொன்ன சம்பவத்தை அடுத்து யார் அந்த ஹீரோ என்று நெட்டிசன்கள் தேடலில் இறங்கினர். அதன்படி 2001ஆம் ஆண்டு விசித்திரா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் பலேவடிவி பாசு. அதன் ஹீரோ பாலகிருஷ்ணா. எனவே அவர்தான் இந்த கீழ்த்தரமான வேலையை செய்திருக்கிறார் என கூற ஆரம்பித்தனர். இந்த சூழலில் விசித்திரா மட்டுமின்றி இன்னொரு நடிகையும் பாலகிருஷ்ணாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.
என்ன நடந்தது?: அதாவது தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடந்திருக்கிறது. அதில் பாலகிருஷ்ணாதான் ஹீரோவாம். இவருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு பக்கத்திலேயே இருக்கும் 3 ஸ்டார் ஹோட்டலில் படத்தின் ஹீரோயினுக்கு ரூம் போடப்பட்டிருக்கிறது.
இதனை தெரிந்துகொண்ட பாலகிருஷ்ணா அந்த நடிகையை தொடர்புகொண்டு, நீ அந்த ஹோட்டலை காலி செய்துவிட்டு இந்த ஹோட்டலுக்கு வந்துவிடு என்று சொல்லியிருக்கிறார். பாலைய்யாவின் நோக்கத்தை புரிந்துகொண்ட அந்த நடிகை இல்லை எனக்கு இதுவே வசதியாக இருக்கிறது என்று சொல்லி வர மறுத்துவிட்டார். மறுநாள் காலை ஷூட்டிங்கிற்கு அந்த நடிகை சென்றபோது அவரை படக்குழுவில் ஒருவர் தடுத்து நிறுத்தி, உங்களை இந்தப் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு காரணம் பாலகிருஷ்ணாதானாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











