Sivakarthikeyan - அழிக்க நினைத்த குடும்பம்.. விழிபிதுங்கி நின்ற சிவகார்த்திகேயன்.. ஒரு அதிர்ச்சி சம்பவம்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனுக்கு சினிமா துறையில் நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது.

சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

Journalist Cheyyaru Balu Reveals bad incident happened to Sivakarthikeyan in the film industry

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஷ்வின் படத்தை இயக்கியிருப்பதால் படம் ஹிட்டாகும் எஸ்கேவின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் ரிலீஸாகிறது. எனவே ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அதாவது ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் ரிலீஸாகிறது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தை முடித்துவிட்டு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதற்காக சிவகார்த்திகேயன் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்துவருவதாகவும், இந்தப் படம் அவரது கரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று பேச்சு எழுந்திருக்கிறது. இப்படி மேடையில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் பயணம் இப்போது அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

Journalist Cheyyaru Balu Reveals bad incident happened to Sivakarthikeyan in the film industry

அழிக்க நினைத்த குடும்பம்: இந்தச் சூழலில் சினிமாவில் இருக்கும் ஒரு குடும்பம் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அழிக்க மேற்கொண்ட முயற்சி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயனை அழைத்து அந்த குடும்பம் நான்கு படங்களுக்கான ஒப்பந்தத்தை போட்டதாம். அதுமட்டுமின்றி அந்த நான்கு படங்களுக்கும் சேர்த்து ரொம்பவே சிறிய தொகையை அட்வான்ஸாகவும் கொடுத்தார்களாம்.

ஷூட்டிங்கே போகல: நான்கு படங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் அதற்கான ஷூட்டிங்கை தொடங்கவே இல்லையாம். படம் எப்போது தொடங்கும் என சிவகார்த்திகேயன் கேட்டாலும் அதற்கும் முறையான பதில் இல்லையாம். ஒருகட்டத்தில் ஒப்பந்தம் போட்டவர்களிடம், எனக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் படம் செய்ய அழைக்கிறார்கள் என்றாராம் சிவா. அவர்களும், சரி நீங்கள் போய் நடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி இவர்கள் ஒரு சிக்கலான தேதியை சொல்லியிருக்கிறார்கள்.

மீண்டும் மழுப்பல்: அதேசமயம் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க வரும் மற்ற நிறுவனங்களில் ஒன்று அந்த ஒப்பந்தத்தின்படி படத்தை நடித்து முடியுங்கள். இல்லையென்றால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வாருங்கள் நாம் படம் செய்யலாம் என கூறியிருக்கின்றது. இதற்கு என்னதான் முடிவு என்ற நோக்கத்தில் நான்கு ஒப்பந்தங்கள் போட்டவர்களிடம் மீண்டும் சென்றபோது அவர்கள் மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார்கள்.

வெளிவந்த உண்மை: அப்போதுதான், இந்த ஒப்பந்தம் போட்டது நம் வளர்ச்சிக்காக இல்லை வளர்ச்சியை அழிப்பதற்காகத்தான் என்று புரிந்துகொண்டாராம் சிவகார்த்திகேயன். ஒருவழியாக அந்தப் பிரச்னையிலிருந்தும் வெளியே வந்துவிட்டார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ஆனால் சினிமாத்துறையை சேர்ந்த அந்தக் குடும்பம் எது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X