அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆனா செம ட்விஸ்ட்

சென்னை: Ajith (அஜித்) அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி பார்க்கலாம்.

தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த பிறகும் அவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

Journalist Cheyyaru Balu Reveals Unknown Side of Ajith

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையே பெற்றது. அதன் காரணமாக அஜித் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். துணிவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேற மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார்.

விடாமுயற்சி: அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் அஜித்தின் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில்தான் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அமர்க்களம்: அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில்தான் நடித்துவருகிறார். அது அவருக்கு பக்காவாக செட் ஆகவும் செய்கிறது. அதேசமயம் அஜித்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு காட்டிய படம் என்றால் அது அமர்க்களம் படம்தான். சரண் இயக்கி கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அப்படத்தில் நடித்தபோதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதலும் ஏற்பட்டது.

சர்ப்ரைஸ்: இந்த சூழலில் அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி தெரியவந்திருக்கிறது. அதாவது, படத்தின் ஷூட்டிங்கிற்கு சரண் எப்போதும் இருசக்கர வாகனத்தில்தான் வருவாராம். சென்னை சீனிவாசா தியேட்டரில் ஒருநாள் ஷூட்டிங் நடந்து முடிந்ததும் பேக்கப் சொல்லிவிட்டு ஸ்பாட்டிலிருந்து கிளம்புவதற்காக பைக்கை தேடினாராம் சரண்.

ஆனால் அவர் நிறுத்திய இடத்தில் பைக்கை காணவில்லையாம். உடனே சரண் பதறியபடி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தாராம். அதனை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்த அஜித்தை கவனித்த சரண் ஏன் சிரிக்கிறீங்க ஜி என்று கேட்டாராம். அதற்கு அஜித்தோ, 'ஏன் சார் நீங்க இந்தப் படத்தோட இயக்குநர். ஆனா நீங்க பைக்ல வரீங்களே என கேட்டுவிட்டு ஒரு மாருதி காரின் சாவியை எடுத்து சரணிடம் கொடுத்து இனி நீங்கள் காரில் வாங்க என்று கூறினாராம். ச

தனக்காக புதிய கார் வாங்கிக்கொடுத்த அஜித்தின் அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன சரண் கடைசியாக ஒரு ட்விஸ்ட் வைத்தாராம். அதாவது தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லிவிட்டாராம். பிறகு அந்தப் படத்தில் சரணிடம் இணை இயக்குநராக இருந்த ஹரிதான் சரணை அந்தக் காரில் வைத்து தினமும் வீட்டிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டி செல்வாராம்.. இந்தத் தகவலை செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X