Rajinikanth - துறவறம் போக முடிவு செய்த ரஜினிகாந்த்.. வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்ற ரசிகர்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) தான் அசுரத்தனமாக வளர்ந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் துறவறம் செல்ல முடிவு எடுத்தார்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். தனது நடை, உடை, பாவனை, பேசும் ஸ்டைல் என அனைத்திலும் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர். எதெல்லாம் அவருக்கு மைனஸாகும் என கணிக்கப்பட்டதோ அதெல்லாம்தான் ப்ளஸ்ஸாக மாறியிருக்கிறது. எனவேதான் அவருக்கென்று சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஆரம்ப கால கஷ்டம்: ரஜினிகாந்த் பெங்களூரில் நடத்துநராக பணியாற்றியவர். நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டவர். படிக்கும்போதே ரொம்பவும் வறுமையில்தான் இருந்தார். அதனால் அவர் சிறிய அறையில் தங்கி முடிந்த அளவு வீட்டுக்கு கஷ்டம் வைக்கக்கூடாது என்று நினைத்து ரொம்பவே சிக்கனமாக இருந்தவர்.
கிடைத்த வாய்ப்பு: ஒருவழியாக பாலசந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு சில படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ரோலும் செய்துகொண்டிருந்த ரஜினி பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவை பல வருடங்களாக ரூல் செய்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
கோபக்காரர்: ரஜினிகாந்த் இப்போது வேண்டுமானால் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவருடைய இள வயதில் பயங்கர கோபக்காரர். தன் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கமுடைய ரஜினிக்கு அதனால் சில பிரச்னைகளும் வர செய்திருக்கின்றன. குறிப்பாக விமான நிலையத்தில் அவர் குடி போதையில் அதிகாரிகளிடம் சண்டை போட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
துறவறம்: ஒருகட்டத்தில் தன்னுடைய கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்தார். அதற்கு அவர் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தார். தீவிர ஆன்மீகவாதியான ரஜினி இமயமலை செல்வதையும் தன்னுடைய வழக்கமாக மாற்றினார். இந்த சூழலில் தான் அசுரத்தனமாக வளர்ந்த காலத்தில் துறவறம் செல்வதற்கு முடிவு எடுத்தாராம் ரஜினிகாந்த்.
என்ன நடந்தது?: ஒரு நாள் தனது மனைவியை அழைத்த ரஜினி, நமக்கு இரண்டு அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். தேவையான அளவு வசதியும் இருக்கிறது. அதனால் நான் துறவறம் செல்லலாம் என முடிவு எடுத்திருப்பதாக கூறினாராம். அதிர்ச்சியடைந்த லதா அதெல்லாம் கூடாது என்று எவ்வளவு சொல்லியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். ஒருகட்டத்தில் லதாவும் அதற்கு ஒத்துக்கொண்டாராம்.

விஷயம் எப்படியோ வெளியே லீக் ஆக ஆரம்பித்திருக்கிறது. உடனே இயக்குநர் எஸ்.பி முத்துராமன் ரஜினியிடம் சென்று அப்படியெல்லாம் செய்யக்கூடாது என சொல்ல ரஜினி விடாப்பிடியாக இருந்தாராம். அதனையடுத்து அவர் கையை பிடித்து வீட்டு பால்கனிக்கு அழைத்து வந்து கீழே நின்றிருந்த ரசிகர் கூட்டத்தை காண்பித்து இவர்களுக்கு எல்லாம் நீ என்ன செஞ்ச. உன் மீதிருக்கும் அன்பால்தான் இவர்கள் எல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள் என்றாராம்.
அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கையில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியுடன் இருந்தபடி, 'தலைவா நீ மட்டும் அந்த முடிவை எடுத்தால் நான் இங்கேயே கொளுத்திட்டு செத்துபோவேன்' என்றாராம். அதனைத் தொடர்ந்துதான் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினாராம் ரஜினி. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











