Kamal Haasan - நாற்காலியை எட்டி உதைத்த கமல் ஹாசன்.. அரண்டுபோன ஷூட்டிங் ஸ்பாட்

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசன் நாற்காலியை எட்டி உதைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து அவரது நடிப்புக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

 Journalist Cheyyaru Balu Shares his memories with Kamal Haasan

புதுமை கமல் ஹாசன்:

கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி என ஏராளமான படங்களில் அவர் செய்த கெட் அப் சேஞ்சுகளை பார்த்த நடிகர்கள் இன்றுவரை மிரண்டிருக்கிறார்கள்.

இயக்கத்திலும் புதுமை:

நடிப்பு மட்டுமின்றி அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. ஒரே கதையை இரண்டு பேர் தங்களது பார்வையில் விவரிக்கும் மாயாஜாலத்தை முதல்முதலில் திரையில் நிகழ்த்திக்காட்டியவர் கமல் ஹாசன். அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படம் வெளியானபோது கொண்டாடப்படாமல் இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மெகா ஹிட்டான விக்ரம்:

நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார் கமல் ஹாசன். ஆனால் அவரால் அரசியலில் சோபிக்க முடியவில்லை. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் கமல் ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விக்ரம் வெற்றி கொடுத்த உற்சாகத்தை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். அதற்கு அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து படமும் தயாரிக்கிறார்.

 Journalist Cheyyaru Balu Shares his memories with Kamal Haasan

எட்டி உதைத்த கமல்:

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசன் நாற்காலியை எட்டி உதைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனை பேட்டி எடுக்க பத்திரிகையாளர் செய்யாறு பாலு சென்றிருக்கிறார். பேட்டியை ஆரம்பிக்கும்போது அவர் ஒரு நாற்காலியில் அமர போயிருக்கிறார். அதனை கவனித்த கமல் ஹாசன் ஒரு நிமிஷம் எனக்கூறிவிட்டு, தனது காலால் அந்த நாற்காலியை தூக்கி மேலும் கீழும் ஆட்டியிருக்கிறார்.

புதிய நாற்காலி:

அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்து தூரமாக எறிந்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கமலிடம் என்ன ஏது என்று விசாரிக்க; இது என்ன நாற்காலில் அவ்வளவு சேதமடைந்திருக்கிறது. இங்கு வரும் விருந்தினர்களுக்கு இப்படித்தான் நாற்காலியை கொடுப்பீர்களா என கோபமாக கேட்டுவிட்டாராம். அதன் பிறகு அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக புத்தம் புது நாற்காலியை கொண்டு வந்ததாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X