என் சொத்துனு நினைச்சேன்.. ரோஜாவ அவர் தூக்கிட்டாரே.. மன்சூர் அலிகான் அப்போவே கெளப்பிய அலப்பறை

சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய சூழலில் அவர் ஏற்கனவே இப்படி பேசியிருக்கிறாராம்.

விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அடையாளப்பட்டவர் மன்சூர் அலிகான். அந்தப் படத்தில் அவரது நடிப்பும் தனித்துவமான உடல்மொழியும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து அவருக்கு தமிழில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. இதன் காரணமாக 90களில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தார் மன்சூர் அலிகான்.

Journalist Cheyyaru Balu Talks about Mansoor Ali Khans Unknown Side

வரிசையாக ஹிட் படங்கள்: அவர் நடித்த செம்பருத்தி, பாண்டிதுரை, ஏழை ஜாதி, தேவா, அசுரன், மக்கள் ஆட்சி என பல படங்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக ஒரே வருடத்தில் 5லிருந்து 6 படங்கள்வரை அவர் நடித்து ரிலீஸாகின. அதுமட்டுமின்றி மன்சூர் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தை மக்கள் ரொம்பவே ரசிக்கவும் செய்தனர். இதனால் மன்சூர் காட்டில் பெரும் மழையே அடித்தது.

ஒதுங்கினாலும் வெளிச்சம்தான்: ரஜினி, விஜய் உள்ளிட்டோருடனும் நடித்திருந்த மன்சூர் அலிகானுக்கு திடீரென வாய்ப்புகள் குறைய சினிமாவிலிருந்து அவர் ஒதுங்கினார். அதனையடுத்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, அரசியலில் என்ட்ரி ஆனது என தன்னை வெளிச்சத்திலேயே வைத்துக்கொண்டார். அதுவும் சில பேட்டிகளின்போது அவர் செய்த சில சேட்டைகள் இணையத்தில் ட்ரெண்டாகின.

லியோ: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார் மன்சூர் அலிகான். அதில் அவரை லோகேஷ் ஓரளவு நன்றாகவே பயன்படுத்தியிருந்தார். மேலும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் த்ரிஷா பற்றிய அவரது ஆபாச பேச்சு அந்த வாய்ப்பை கெடுத்திருக்கும் என்பதுதான் உண்மை.

மன்னிப்பு கேட்க மறுக்கும் மன்சூர்: த்ரிஷாவுடன் பெட் ரூம் சீன் இருக்கும் என எதிர்பார்த்ததாக மன்சூர் அலிகான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும் திரள ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் அவர் இப்படி நடிகையை பற்றி பேசுவது முதல் முறை இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.

என் சொத்து: அதாவது செம்பருத்தி படத்தில் மன்சூர் அலிகானும் நடித்திருப்பார். அதில் செம்பருத்தி (ரோஜா) என் சொத்து என்ற டயலாக் பேசுவார். அந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற மன்சூர் அலிகானிடம் பத்திரிகை நிருபர் ஒருவர், சார் நீங்க செம்பருத்தில நன்றாக நடித்திருந்தீர்கள். செம்பருத்தி என் சொத்து என நீங்கள் சொல்வது நன்றாக இருக்கும் என்றாராம்.

அதற்கு இவரோ, ஆமா செம்பருத்தி என் சொத்துனு சொன்னேன். ஆனால் என்ன பண்றது ரோஜாவ ஆர்.கே.செல்வமணி தூக்கிட்டு போய்ட்டாரே என ஒரே போடாக போட்டாராம். இதனை கேட்டு அந்தப் பத்திரிகையாளர் அதிர்ச்சியடைந்தாராம். அதுமட்டுமின்றி பத்திரிகையாளரிடம் அவர், இதை அப்படியே எழுதுறதுனாலும் எழுதிக்கோ என சொல்லிவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X