நான் அந்த மாதிரியா?.. தனுஷிடம் அழுத சினேகா?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் GOAT படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய விஷயம் தெரியவந்திருக்கிறது.

நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் சினேகா. அழகான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு வரிசையான வாய்ப்புகளை கொடுத்தன.

Sneha Dhanush Cheyyaru Balu

முன்னணி நடிகை: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.

புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டம் சினேகாவுக்குத்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.

Sneha Dhanush Cheyyaru Balu

திருமணம்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா இப்போது விஜய் நடிப்பில் GOAT படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

அழுத சினேகா: இந்நிலையில் சினேகா தனுஷிடம் அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது சினேகாவின் கரியரில் முக்கியமான படம் புதுப்பேட்டை. அந்தப் படம் க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படத்தில் சினேகா விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்து நல்ல பெயரை பெற்றார். ஆனால் அந்த கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தபோது எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரமா என்று தனுஷிடம் அழுதாராம். அதற்கு தனுஷோ, அழுகாதீர்கள் கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் உங்களுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று உறுதியளித்தாராம். இந்தத் தகவலை செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X