கடன் கேட்ட கிரண்.. படுக்கைக்கு அழைத்த நண்பர்.. இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?

சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்தச் சூழலில் அவர் பற்றிய ஒரு தகவல் பரவியிருக்கிறது.

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. சரண் இயக்கியிருந்த அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏவிஎம் தயாரிப்பில் சில வருடங்கள் படங்கள் எதுவும் வராமல் இருந்த சூழலில் ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது.

throwback stories kiran cheyyaru balu

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்: பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார். இருந்தாலும் கிரண் ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகாமல் இருந்தது. அதை மாற்றுவதற்கு ஒரு படத்துக்காக காத்திருந்தார் கிரண்.

அன்பே சிவம்: அப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.

ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட விஷயங்களுக்காக அவர் பணம் வசூலிப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது.

கடன் கேட்ட கிரண்: இந்தச் சூழலில் கிரண் பற்றி ஒரு விஷயம் பேசப்படுகிறது. அதாவது வாய்ப்பு எதுவும் இல்லாத சூழலிலும், கொரோனா காலகட்டத்திலும் கிரணிடம் ஒரு ரூபாய்கூட பணம் இல்லையாம். இதன் காரணமாக தனது நண்பர் குழுவில் பணம் கொஞ்சம் கடனாக கேட்டாராம். உடனே அதில் சிலர் நாங்கள் பணம் தருகிறோம்; பதிலுக்கு என்ன தருவாய் என்று கேட்டார்களாம். அதற்கு கிரணோ பணத்தை திருப்பி தருவேன் என்று கூறியதற்கு; அவர்களோ எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம்; வேறு தருவாயா என்று சுற்றி வளைத்து படுக்கைக்கு அழைத்தார்களாம்.

அப்போது நண்பர்களே இப்படி இருக்கிறார்களே என்று மனம் நொந்தாராம் கிரண். அதுமட்டுமின்றி அவர் ரொம்பவே மதிப்பு வைத்திருந்த இரண்டு பெரியவர்களும் அதேபோல்தான் நடந்துகொண்டார்களாம். அப்போதுதான் இங்கு யாருமே உண்மையில்லை என்று நினைத்தாராம் கிரண். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X