Vijay - என்னது வடிவேலுவா.. கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட டைரக்டர்.. வாய்ப்பு கொடுத்த விஜய்
சென்னை: Vijay (விஜய்) என்னது வடிவேலு ஹீரோவா நீங்க முதல கிளம்புங்க என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட இயக்குநருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தாராம்.
விஜய் இப்போது வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இடம்பிடித்துவிடுகின்றன. சமீபத்தில் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் லியோ படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் இதுவரை 400 கோடி ரூபாய் வரைக்கும் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப விஜய்: அடுத்ததாக தனது 68ஆவது படத்தில் நடிக்கவிருக்கும் விஜய்க்கு சம்பளமே 175 கோடி ரூபாய் என்று முணுமுணுக்கப்படுகிறது. அதற்கெல்லாம் காரணம் அவர் இப்போது கமர்ஷியல் கிங்காக ராஜபாட்டை நடத்திவருகிறார். ஆனால் ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படங்கள், காதல் படங்களில் நடிப்பதற்கு அதீத கவனம் செலுத்தியவர். அந்த ஜானரில் அவர் நடித்த படங்களும் ஹிட்டாகி அவருக்கு கை கொடுத்தன.
துள்ளாத மனமும் துள்ளும்: அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழில் அந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். விஜய், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. முக்கியமாக விஜய்யின் கேரியரில் தி பெஸ்ட் படங்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தால் அதில் துள்ளாத மனமும் துள்ளும் நிச்சயம் இடம்பெறும்.
குட்டி விஜய்: துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் வடிவேலுதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட விஜய் உள்ளே வந்தார். குட்டி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு அந்தப் படம் நன்றாகவே தீனி போட்டது. சாந்தமான நடிப்பு, அளவான அழகு, கேஷுவல் லுக் விஜய் வேறு பரிணாமத்தில் தோன்றி அசத்தியிருந்தார்.
அவமானப்பட்ட எழில்: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை சார்லி சாப்ளின் சிட்டி ஆஃப் லைட்ஸ் கதையை அடிப்படையாக வைத்துதான் எழில் உருவாக்கியிருந்தார். இருந்தாலும் முழுக்க முழுக்க அப்படியே யோசிக்காமல் அதனை இன்ஸ்பிரேஷனாக வைத்து கதை எழுதியிருக்கிறார் ஆனால் இது சார்லி சாப்ளின் கதையின் காப்பி என கூறி அந்தக் கதையை நிராகரித்தார்களாம். சூழல் இப்படி இருக்க எழிலுக்கு அப்போது வளர்ந்துவந்த வடிவேலு பழக்கமானார். அப்போது வடிவேலுவை வைத்து இந்தக் கதையை எடுக்கலாம் என யோசித்து வடிவேலுவை ஹீரோவாக ஃபிக்ஸ் செய்துவிட்டாராம் எழில்.
வடிவேலு ஹீரோவா?: இதனையடுத்து வடிவேலுவை ஹீரோவாக வைத்து எழுதப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி இறங்கினாராம் எழில்.ஆனால் அவர்களோ என்னது வடிவேலு ஹீரோவா நீங்க முதல கிளம்புங்க என்று சொல்லி கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்களாம். ஒருகட்டத்தில் இப்படி ஒரு கதை இருப்பதாக சூப்பர் குட் பிலிம்ஸுக்கு தெரிய வர; நீ போய் விஜய்யிடம் கதை சொல் என்று சொல்லி ஆர்.பி.சௌத்ரி அனுப்பினாராம். கதையை கேட்ட விஜய் உடனடியாக ஒத்துக்கொண்டாராம். அப்படி அவர் ஒத்துக்கொண்ட படம்தான் இன்று அவரது கரியர் பெஸ்ட்டாக நிற்பதற்கு குறிப்பிடத்தக்கது. இதனை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











