கனகா கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குவார்.. பதிலுக்கு அவரும் திட்டுவார்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கனகா குறித்து பேசியிருக்கிறார்.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.
தனிமைப்படுத்திய கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.
குட்டி பத்மினி என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதனையடுத்து குட்டி பத்மினிக்கு கனகா பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கனகா குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார், அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கனகாவின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமே அவரது அப்பாவும், அம்மாவும்தான். கனகாவை அவரது அப்பா கெட்ட வார்த்தையால் திட்டுவார். பதிலுக்கு கனகாவும் பச்சை பச்சையாக பேசுவார். ஷூட்டிங் முடிந்து கனகா எங்கேயும் செல்லக்கூடாது என்று அவருடைய அம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு நெருக்கடி கொடுத்தார்.
மன அழுத்தம்: ஒருகட்டத்தில் கனகா அதிக மன அழுத்தத்துக்கு ஆளானார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து விலக முடிவு செய்தார். நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஆனால் கனகா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆண்கள் என்றாலே தனது அப்பா போல் கொடுமையானவர் என்ற பிம்பம் அவருக்கு வந்துவிட்டது. அதேபோல் அவரது அம்மாவின் இறப்புக்கு பிறகு கனகாவின் நிலைமை ரொம்பவே மோசமாகிவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











