அஜித் - ஹீரா காதல்..மிரட்டிய தயாரிப்பாளர்?..நடிகை காணாமல் போக அதுவே காரணமா?.. சீக்ரெட் சொன்ன பிரபலம்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடாமுயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் ரிலீஸான படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக விடாமுயற்சி போல் இல்லாமல் குட் பேட் அக்லி செம ட்ரீட் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அஜித் பற்றிய சில சீக்ரெட்களை தெரிவித்திருக்கிறார்.

சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் திரைத்துறைக்குள் வந்தவர் அஜித்குமார். சினிமாவில் சரியான வழிகாட்டி யாரும் அவருக்கு இல்லாததன் காரணமாக ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறினார். அந்தத் தடுமாற்றங்களை எல்லாம் அவரே சரி செய்துகொண்டு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்து தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அவரை திரையில் பார்த்தால் மட்டும் போதும் என்ற அளவுக்கு அவரின் ரசிகர்கள் வெறிப்பிடித்திருக்கிறார்கள் என்பது தனிக்கதை.

Journalist Sabitha Joseph Talks about Ajith Heera Love Story

விடாமுயற்சி அஜித்: அஜித்தின் அடிப்படை குணமே விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும்தான். விஜய், சூர்யா உள்ளிட்டோரும் அஜித்திடம் தங்களுக்கு பிடித்த குணம் அந்த இரண்டும்தான் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களும் அதையேத்தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் தன்னிடமிருந்து அந்த குணங்களை அகலாமல் பார்த்துக்கொள்கிறார். அவரேகூட ஒரு பேட்டியில், 'நான் கொடுத்த தோல்விகளை இன்னொரு ஹீரோ கொடுத்திருந்தால் இந்நேரம் சினிமாவிலிருந்து காணாமல் போயிருப்பார்கள்' என்று ஓபனாக சொல்லியதுண்டு.

அலைபாய்ந்த குணம்: அவருக்கு கார் ரேஸ் மீது அலாதி பிரியம் உண்டு என்பது அனைவரும் அறிந்தது. அதற்காக ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்திருக்கிறார். தன்னுடைய கரியரின் ஆரம்ப காலத்தில் ரேஸ் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் தனது எண்ணங்களை அலைபாயவிட்டார். அதன் விளைவு தொடர் தோல்விகள், பிரச்னைகள், விபத்துகள். தயாரிப்பாளர் ஒருவர்கூட இதுகுறித்து பேசிவைக்க; அஜித்தோ அந்தத் தயாரிப்பாளருக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.

Journalist Sabitha Joseph Talks about Ajith Heera Love Story

வென்ற அஜித்குமார்: இடையில் தன்னுடைய ரசிகர்களுக்காக கார் ரேஸுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமீபமாக கார் ரேஸ் மீது தனது முழு கவனத்தையும் திருப்பியிருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் ஒன்றில் தனது டீமுடன் களமிறங்கி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார். அடுத்ததாக ஸ்பெயினில் நடந்த ரேஸிலும் கலந்துகொண்ட அஜித்துக்கு; துபாய், ஸ்பெயின் ஆகிய இரண்டு இடங்களிலுமே விபத்துகள் ஏற்பட்டன; நல்வாய்ப்பாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. கார் ரேஸ் நடக்கும் காலத்தில் கண்டிப்பாக சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் உறுதிபட கூறிவிட்டார் அவர். இந்த ரேஸுக்காகத்தான் ஒரே நேரத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்தார் அவர்.

நல்ல குடும்பஸ்தன்: அதேபோல் அஜித்துக்கு சினிமா, கார் ரேஸ் இந்த இரண்டை விட்டால் அடுத்து குடும்பம்தான். அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். தனது குடும்பத்துடன் முழு நேரத்தையும் செலவிட விரும்பும் அவர்; வருடா வருடம் தனது குடும்பத்துடன் ஏதேனும் ஒரு நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் டூர் அடித்துவிடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக அஜித்- ஷாலினி திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Journalist Sabitha Joseph Talks about Ajith Heera Love Story

ஹீராவுடன் காதல்: இப்போது வேண்டுமானால் அஜித் கிசுகிசுவிலும், சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்துவந்த சமயத்தில் சிக்கியிருக்கிறார். அஜித் நடித்த தொடரும், காதல் கோட்டை திரைப்படங்கள்தான் அதற்கு விதை போட்டன. அந்த இரண்டு படங்களிலுமே ஹீரா நடித்திருந்தார். காதல் கோட்டை படத்தில் அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் கேரக்டர் அவருக்கு. இருவருக்குமான கெமிஸ்ட்ரி கேமராவுக்கு பின்பும் ஒர்க் அவுட் ஆனதால் இரண்டு பேரும் தீவிரமாக காதலித்தார்கள். அதுமட்டுமின்றி லிவிங் டூ கெதரில் அவர்கள் இருந்ததாகவும் அந்த சமயத்தில் ஒரு தகவல் பரவியதுண்டு.

முறிந்த காதல்: கண்டிப்பாக அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் திடீரென அஜித்தும் ஹீராவும் பிரிந்துவிட்டார்கள். அது அப்போது பெரும் விவாதத்தை கிளப்பியது. முக்கியமாக எதற்காக அவர்கள் இரண்டு பேரும் பிரிந்தார்கள் என்பதை ஏகேவின் ரசிகர்கள் இன்னமும் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே அதுகுறித்து தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

Journalist Sabitha Joseph Talks about Ajith Heera Love Story

சபிதா ஜோசப் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "தொடரும் படத்தில் நடித்தபோது அஜித்துக்கு ஹீராவை பிடித்துப்போய்விட்டது. இரண்டு பேருமே ஜாலியாக பேசிக்கொள்வார்கள். காதல் கோட்டை படத்தின் சமயத்தில் எல்லாம் இருவருக்குமான காதல் வளர்ந்துவிட்டது. அடிக்கடி இரண்டு பேரும் வெளியிடங்களுக்கு ஒன்றாகவே வர ஆரம்பித்தார்கள். இந்த விஷயம் எல்லாம் அப்போது பெரிய பேசுபொருளாகிவிட்டது. அதற்கு பிறகு அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

பெற்றோர்தான் காரணம்: இரண்டு பேரும் காதலித்தார்கள். ஆனால் அஜித்தின் தந்தையும், தாயும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அஜித்திடம், 'நீ இப்போதுதான் வளர்ந்துவருகிறாய். இந்த நேரத்தில் காதல் எல்லாம் வேண்டாம்' என்றார்கள். அதுமட்டுமின்றி ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் அஜித்தின் பெற்றோர் விஷயத்தை சொன்னார்கள். உடனே அந்தத் தயாரிப்பாளரும் ஹீராவை கூப்பிட்டு அஜித் வாழ்க்கையில் வரக்கூடாது; மீறி வந்தால் அவ்வளவுதான் என்று மிரட்டினார். அதற்கு பிறகுதான் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

இந்த விஷயத்துக்கு பிறகு ஹீரா சிங்கிளாகத்தான் இருந்தார். தொடர்ந்து சில படங்கள் செய்தார். ஆனால் அது அவருக்கு ஒர்க் ஆகவில்லை. ஹீரா சினிமாவிலிருந்து ஒதுங்கியதற்கு காரணமே அந்தக் காதல் தோல்விதான். சினிமாவில் இருந்தால் மீண்டும் அஜித்தை சந்திக்க நேரிடும் என்று நினைத்துதான் அவர் ஒட்டுமொத்தமாக இன்டஸ்ட்ரியிலிருந்து விலகியேவிட்டார்.ஹீரா தைரியமான ஆள்தா. இருந்தாலும் காதல் தோல்வி அவரை கஷ்டப்படுத்திவிட்டது" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும் அஜித் ரசிகர்களோ, ஓஹோ ஏகே - ஹீரா காதல் பிரிவதற்கு இதுதான் உண்மையான காரணமா என்று சோஷியல் மீடியாவில் கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X