கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸுக்கு போனாராம் பானுப்ரியா.. ஓவராக பேசிய தமிழா தமிழா பாண்டியன்
சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். 80களின் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிகராக வலம் வந்தாலும் தனது தந்தை போல் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கார்த்திக் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கார்த்திக் பாரதிராஜாவின் அறிமுகம். அலைகள் ஓய்வதில்லை படம் மெகா ஹிட்டான பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட கார்த்தி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் பல வேரியஷன்களை காண்பித்தார். தனது டயலாக் டெலிவிரி, உடல் மொழி என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்ட அவர்தான் 80களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பெண் ரசிகைகளை கவர்வது ரொம்பவே கடினம். அதனை அசால்ட்டாக செய்தார் கார்த்திக்.

பெஸ்ட் மௌன ராகம்: கார்த்திக் எத்தனையோ படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கெஸ்ட் ரோலில் வந்து ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிய மௌன ராகம் படம் அவருக்கு எப்போதுமே பெஸ்ட். அதேபோல் அவர் நடித்த அமரன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் பாய் மோடுக்கு மாறி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார். ஒருபக்கம் ரொமாண்ட்டிக் படம் மறுபக்கம் ஆக்ஷன் படம் என கலக்கிக்கொண்டிருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ஜானர் படங்களிலும் நடித்து அந்த ஏரியாவிலும் பெரும் ரவுண்டு வந்தவர்.
ஆக்ஷன் ஹீரோவும்கூட: சாக்லேட் பாய் இமேஜுக்குள் ஒரு நடிகர் விழுந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கியவரும் கார்த்திக்தான். அவர் நடித்த அமரன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் பாய் மோடுக்கு மாறி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார். ஒருபக்கம் ரொமாண்ட்டிக் படம் மறுபக்கம் ஆக்ஷன் படம் என கலக்கிக்கொண்டிருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ஜானர் படங்களிலும் நடித்து அந்த ஏரியாவிலும் பெரும் ரவுண்டு வந்தவர்.
விமர்சனம்: எவ்வளவுக்கு எவ்வளவு அவர் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாரோ அதே அளவு அவர் மீது விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அதாவது கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மாட்டார். வேண்டுமென்றே லேட் செய்வார் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் அவர் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் பெற்றதுண்டு. காலம் செல்ல செல்ல கார்த்திக்கிற்கு பட வாய்ப்புகள் குறைய; தனது மகன் கௌதம் கார்த்திக்கை சினிமாவில் களமிறக்கினார். ஆனால் கௌதமுக்கு சொல்லிக்கொள்ளும்படி இதுவரை ஒரு வெற்றியும் இல்லை.
பாண்டியன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பானுப்ரியா கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று அங்கிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டையே கெஸ்ட் ஹவுஸாக மாற்றிவிட்டார்கள். இதற்கு நடுவில் பானுப்ரியாவையும், தயாரிப்பாளரையும் ஏமாற்றினார் கார்த்தி. நேரில் போய் பார்த்தபோது காலில் பெரும் கட்டு போட்டு அமர்ந்திருந்தார். அந்தக் கட்டை பிரித்து பார்த்தால் காலில் காயமும் இல்லை எதுவும் இல்லை. போலி கட்டு போட்டு போலியாகவே இருந்தார் அவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











