அஜித்தை அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா.. மறுத்த ஏகே.. பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் ஷேரிங்ஸ்

சென்னை: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. விடாமுயற்சியை பொறுத்தவரை அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக வேறு லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Journalist V.K.Sundar Talks about Ajithkumar And Jayalalithaa

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜோராக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்த லொக்கேஷன் தேடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.

ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.கே.சுந்தர் பேட்டி: அதேபோல் அரசியல் குறித்தும் வெளியில் பேசாதவர். இந்நிலையில் பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விஜய்க்கு சரியான வழிகாட்டுதல்கள் அரசியலில் வேண்டும். அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறியதும் தினமும் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். அஜித் முழு நேர அரசியலுக்கு எல்லாம் வரமாட்டார்.

அஜித், ஜெயலலிதா: அஜித்தை ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும். அஜித் திருமணத்திற்கு வந்த ஜெயலலிதா நீண்ட நேரம் இருந்துவிட்டுத்தான் சென்றார். ஒருகட்டத்தில் அஜித்தை கட்சியில் இணைத்துவிட வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்துவிடார். ஆனால் அஜித்குமாரோ சைலெண்ட்டாக மறுத்துவிட்டார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கண்டிப்பாக அஜித் வாழ்த்து கூறியிருப்பார். ஏனெனில் இரண்டு பேருமே குடும்ப நண்பர்கள்" என்றார். முன்னதாக விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X