சாந்தனு - கீர்த்தி கல்யாணத்தின் முதல் அழைப்பிதழை கைப்பட எழுதிய பாக்யராஜ்.. கையெழுத்தை பாருங்க!
சென்னை: தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என திரைக்கதை மன்னன், இயக்குநர் பாக்யராஜை சுருக்கி பார்த்துவிட முடியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே திரைக்கதை மன்னர் என்ற புகழைப் பெற்றவர் பாக்யராஜ் தான். அண்மையில் இவரது திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, ஒரு நெருக்கடியான சூழலில் பாக்யராஜ் தான் தனது உயிரைக் காப்பாற்றினார் என்று அந்த மேடையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவின் திருமணத்தின் போது, திருமணத்திற்காக தனது கைப்பட முதல் அழைப்பிதழை எழுதி உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை மூத்த சினிமா பத்திரிகையாளரும் குணச்சித்திர நடிகருமான கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், " இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியரின் மகன் நடிகர் சாந்தனு, டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கீர்த்தி என்பவரை உயிருக்குயிராக காதலித்தார். இந்த விஷயம் பாக்யராஜுக்கு தெரிந்தது. காதல் திருமணம் செய்தவர் என்பதால், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். அதை கைப்பட ஒரு கடிதத்தில் எழுதி, மீடியாவுக்கு அனுப்பி வைத்தார். 'பாக்யா' பத்திரிகையின் ஆசிரியர் என்பதால், மீடியாவுக்கு ஒரு செய்தியை எப்படி தெரிவிக்க வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது" என்று பதிவிட்டு, பாக்யராஜின் பண்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனு - கீர்த்தி: இந்த கடிதத்தை பாக்யராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு எழுதி உள்ளார். பாக்யராஜ் அந்த கடித்ததில், " பாக்யராஜ் பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம். ஒரு இனிய நற்செய்தி. எங்க வீட்ல விசேஷங்க. ஆம், எங்கள் புதல்வன் சாந்தனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. எங்கள் பெண் சரண்யா சற்று பொறுத்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுக்கு நடக்க உள்ளது.

கைப்பட முதல் அழைப்பிதழ்: பெண்ணின் வீட்டாரும் நமது கலை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். பிரபல நடன இயக்குனர் ஜெயந்தி மற்றும் விஜயகுமார் தம்பதியரின் கீர்த்தியே மணப்பெண். ஆகஸ்ட் 21ஆம் நாள் கோவிலில் திருமணமும், 22 ஆம் நாள் மாலை வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. விரைவில் அழைப்பிதலுடன் முறைப்படி அனைவரையும் அழைக்கிறேன். தங்கள் அனைவரது நல்லாசிகளாலும் எங்களது திரை பயணம் இன்னமும் இனிதே தொடர்கின்றது. அதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி, எங்களது பிள்ளைகளுக்கும் அந்த நல்லாசியை தந்தருள வேண்டுகிறேன், நன்றியுடன் உங்கள் பாக்யராஜ் பூர்ணிமா தம்பதியர்" என்று எழுதி உள்ளார்.
விஜய்: 11 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த அழைப்பிதழ் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கையெழுத்தைப் பார்த்து பலரும் அடடே கையெழுத்து அழகா இருக்கே என்றும் வியந்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் விஜய் தாலி எடுத்துக் கொடுக்க, சாந்தனு தாலியை கீர்த்தி கழுத்தில் கட்டினார்.


Click it and Unblock the Notifications