ரஜினிகாந்த் படத்தில் திரைக்கதை சொதப்பல்.. சுட்டிக் காட்டிய பாக்யராஜ்.. விவரம் இதோ!

சென்னை: தமிழ் சினிமாவில், காலத்திற்கும் கொண்டாடப்படுகின்ற படங்கள், பல வந்துள்ளன. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தளபதி படத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. நட்பு என்றாலே தளபதி படத்தில் வரும் சூர்யா, தேவா கதாபாத்திரங்கள்தான் பலரது நினைவுக்கு வரும் அளவுக்கு தளபதி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலம் கடந்தும் கொண்டாடப்படும் இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய சறுக்கல் அல்லது திரைக்கதையில் பெரிய ஓட்டை இருப்பதாக, இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னர் என அழைக்கப்படும், கே. பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இதனை அவரே ஒரு முறை மேடை ஒன்றில் கூறியுள்ளார்.

தளபதி படம் கடந்த 1991அம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி, ரிலீஸ் ஆனது. இந்தப் படம் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 74வது பிறந்த நாளுக்காக, ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படம் முழுவதும் நண்பர்களுக்கு இடையிலான, ஆழமான நட்பு குறித்து, அட்டகாசமான திரைக்கதையால் சொல்லப்பட்டிருக்கும். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, சோபனா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த் சாமி.

k bhagyaraj rajinikanth thalapathy maniratnam

பாக்யராஜ்: இந்தப் படம் குறித்து கே. பாக்யராஜ் பேசுகையில், ஒருமுறை மணிரத்னம் சாரைப் பார்த்தபோது அவரது தளபதி படம் குறித்து பேசினோம். அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிவரை நட்புதான், நண்பன் தான் என இருக்கும் ரஜினிகாந்த் மம்மூட்டி கதாபாத்திரங்கள், க்ளைமேக்ஸில் சட்டென கீழே இறங்கிவிடுகின்றது. அதாவது, ரஜினியின் அம்மாவை மம்மூட்டி கொல்லச் சொல்கின்றார். ஆனால் ரஜினி மறுத்துவிட்டு போகின்றார்.

நட்பு: இந்தக் காட்சி ஏற்புடையதாக இல்லை. மாறாக, மம்மூட்டி கொல்லச் சொன்னதும் எந்தவிதமான சலனமும் இல்லாமல், ரஜினி காந்த் புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும். அதன் பின்னர், மம்மூட்டிக்கு அருகில் இருக்கும் ஒருவர், ரஜினி கொல்லப்போவது, ரஜினியின் அம்மாவை, அது ரஜினிக்கும் தெரியும். நண்பன் நீங்க சொன்ன காரணத்தால், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், புறப்பட்டுச் சென்றுள்ளார் எனக் கூறவேண்டும்.

திரைக்கதை: இதைக் கேட்ட பின்னர், மம்மூட்டிக்கு, நமது நண்பன், நாம் சொல்லிவிட்டோம் என்பதற்காக, தனது அம்மாவையே கொல்லச் சென்றுவிட்டானே. அவனது அம்மா எனத் தெரிந்த பின்னர், அவனை எப்படி கொல்லச் சொல்வது. இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மம்மூட்டி செய்திருந்தால், க்ளைமேக்ஸ் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்” இப்படி காட்சியை அமைத்திருந்தால், இரண்டு கதாபாத்திரங்களுமே உயர்ந்து நின்றிருக்கும் எனக் கூறினேன். இதைக்கேட்ட மணிரத்னம், ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் சொல்வதைப்போல் க்ளைமேக்ஸ் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனக் கூறியதாக பாக்யராஜ் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X