Rajinikanth - படையப்பாவின் முக்கியமான சீன்.. ரஜினிக்கே தெரியாமல் முடிவெடுத்த கதை தெரியுமா?
சென்னை: Padaiyappa (படையப்பா) படையப்பா படத்தில் வரும் ஒரு முக்கியமான சீன் எடுக்கப்பட்ட விதம் குறித்து தெரியவந்திருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது.

மெகா ஹிட் படையப்பா: படையப்பா திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை ரஜினிகாந்த் பல படங்களை மெகா ஹிட்டாக கொடுத்திருக்கிறார். ஆனால் படையப்பா படம் அதையெல்லாம் தாண்டிய ஹிட்டாக அமைந்தது. ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் என படையப்பா திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. இன்றுவரை பலரது மொபைல்களில் படையப்பா படம் டவுன்லோட் லிஸ்ட்டில் இருக்கிறது.
ரஜினி ஐடியா; நிராகரித்த கமல்: படையப்பா படத்தை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினி படத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார்களாம். ஆனால் இதை கேள்விப்பட்ட கமல் ஹாசன் இரண்டு இடைவேளைகள் விடுவதெல்லாம் ஒத்துவராத விஷயம். எனவே படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடுங்கள் என ஐடியா கூறினார்.
சிவாஜிக்கு ஒருகோடி சம்பளம்: அதேபோல் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிக்கும்வரை அதிகபட்ச சம்பளமாக 20 லட்சம் ரூபாயைத்தான் பெற்றிருக்கிறார். எனவே படையப்பா படத்துக்கும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கும் என நினைத்திருந்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கோடி ரூபாயை சம்பளமாக தர சொன்னது ரஜினிகாந்த் என்பதும், அதுதான் சிவாஜி கணேசன் முதலும் கடைசியுமாக ஒரு கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்: இப்படி பல சிறப்புகள் படையப்பா படத்துக்கு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற சீன்கள். ரஜினிக்கு ஒவ்வொரு சீனும் அவ்வளவு மாஸாக இருந்தாலும் ஊஞ்சலை தனது சால்வையால் இழுத்து கீழே இறக்கும் காட்சி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பேசப்படும். அந்த அளவுக்கு அந்த சீனில் ரஜினியின் ஸ்டைல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கும். அப்படிப்பட்ட சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
முதலில் ஷோஃபாதான்: படத்தின் டிஸ்கஷனில் ஊஞ்சலை ரஜினி இழுப்பது போன்ற சீனை கே.எஸ்.ரவிக்குமாரும் அவரது உதவி இயக்குநர்களும் விவாதிக்கவே இல்லையாம். அதற்கு பதிலாக, வீட்டுக்குள் வரும் ரஜினிகாந்த் தனக்கு இருக்கை எதுவும் இல்லாததை கவனித்து தனது சால்வையால் ஷோஃபாவை இழுப்பதுபோன்றும் அது அவரது அருகே வந்த பிறகு அதில் அவர் அமர்வது போன்றும்தான் அந்த சீனை முடிவு செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட அந்த சீன் எடுக்கப்போகும்போது அந்த வீட்டுக்குள் சென்ற ரவிக்குமார் இறுதியாக ஒருமுறை அத்தனையையும் பார்த்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் அந்த ஊஞ்சலை கவனித்திருக்கிறார். உடனடியாக தனது உதவி இயக்குநர்களை அழைத்து ஷோஃபாவை இழுக்க வேண்டாம். ஊஞ்சலை இழுப்பதுபோல் சீனை மாற்றிக்கொள்வோம் என ஸ்பாட்டில் முடிவு செய்திருக்கிறார்.
நடிப்பதற்காக வந்த ரஜினிகாந்த்திடம் சீனை விளக்க; அதற்கு அவரோ என்னிடம் ஷோஃபானுதானே சொன்னீங்க என கேட்டிருக்கிறார்.அதற்கு ரவிக்குமார், ஆமா சார். பட் இங்க வந்து பார்த்தா ஊஞ்சல் இருக்கும். ஷோஃபாவை சால்வையில் இழுப்பதைவிட ஊஞ்சலை இழுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.அதனால்தான் சீனை மாற்ற முடிவு செய்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.
ரஜினியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அந்த சீனில் நடித்திருக்கிறார். இப்படி ரஜினியிடம் சொல்லாமல் ஃபிக்ஸ் செய்யப்பட்ட சீன்தான் இன்று ரஜினியின் பெயரை சொன்னாலே அவருக்குரிய அடையாளங்களில் ஒன்றாக மாறி நிற்கிறது. இந்தத் தகவலை கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











