சந்தானம் திருமணம்.. என்னை மன்னிச்சிடுங்க.. சிம்புவால் வந்த சங்கடம்.. ஓபனாக பேசிய காதல் சுகுமார்

சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸ் காமெடி நடிகராக வலம் வருபவர். இப்போது ஹீரோவாக மாறியிருக்கும் அவர் வரிசையாக படங்களில் நடித்துவருகிறார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமான சந்தானத்தை சினிமாவுக்குள் அழைத்துவந்தவர் சிம்பு. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் நல்ல நட்பு நிலவிவருகிறது. சூழல் இப்படி இருக்க நடிகர் காதல் சுகுமார் சந்தானத்தின் திருமணம் பற்றியும் சிம்புவால் வந்த சங்கடம் குறித்தும் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது அவர் இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாதித்திருக்கின்றன.

throwback stories simbu santhanam

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடைசியாக இங்க நான்தான் கிங்கு என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இன்னொரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதில் சந்தானம் தீவிரமாக இருக்கிறார்.

சுகுமார் பேட்டி: இந்நிலையில் காதல் படத்தில் நடித்த சுகுமார் சந்தானம் மற்றும் சிம்பு குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "காதல் அழிவதில்லை படத்தில் கூட்டத்தில் சந்தானம், கூல் சுரேஷ் ஆகியோர் நிற்பார்கள். அப்போது நானும், கருணாஸும் பீக்கில் இருந்தோம். கூட்டத்தில் இருந்துகொண்டு தனக்கு எதுவும் வசனம் கிடைக்குமா என்று தவித்துக்கொண்டிருப்பார் சிம்பு. அப்போது இயக்குநரும் ஒரு வசனத்தை சந்தானத்துக்கு கொடுத்தார்.

ஒரு அப்பம்தான்: அந்த வசனத்தையும் சந்தானத்துக்கு முன்னதாகவே கூல் சுரேஷ் பேசிவிடுவார். உடனே டைரக்டர் கொடுத்ததே ஒரு அப்பம்தான். அதிலும் ஒரு ஆப்பா என்று கூறுவார். பிறகு சந்தானத்துக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது எனது கல்யாணத்துக்கு சிம்பு வருவாரா என்று கேட்டார். அதனையடுத்து சிம்புவுக்கு நான் ஃபோன் செய்து சந்தானத்துக்கு திருமணம் என்று சொல்லிவிட்டு நானும் சந்தானமும் சிம்புவை நேரில் சந்தித்தோம். அப்போது திருமணத்துக்கு வருவதாக உறுதியளித்தார் சிம்பு.

கடுப்பான சந்தானம்: சிம்பு வருவதாக சொல்லியிருந்ததால் சந்தானம் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். சிம்புவுக்காக கட் அவுட் எல்லாம் வைத்திருந்தார்கள். ஆனால் அன்றைய தினம் சிம்பு வரவே இல்லை. உடனே அவரை தொலைபேசியில் அழைத்தேன். அப்போது அவர், 'நான் மறந்துவிட்டேன். சிங்கப்பூர் வந்துவிட்டேன். அவரை கொஞ்சம் சமாளிக்க சொல்' என்று சொன்னார். இதனால் சந்தானம் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார். பிறகு சிம்பு இந்தியா வந்தவுடன் அவரை சந்தித்தோம். அப்போது சந்தானத்தை கட்டியணைத்து, மன்னிசிடுங்க பிரதர். நான் வராததனால நீங்க எவ்வளவு சங்கடப்பட்டிருப்பீங்க என்று தெரியும்' என்று சொல்லிவிட்டு; அந்த வலியை எப்படியாவது போக்க வேண்டும் என்பதற்காக மன்மதன் படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி அதில் சந்தானத்தை நடிக்க வைத்தார். படமும் மெகா ஹிட். சந்தானத்துக்கு அதற்கு பிறகு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X