கலைப்புலி தாணு மனைவி இறந்த போது அஜித் செய்த செயல்.. நடுரோட்டில் மணிக்கணக்காக ஷாலினியுடன்.. ஷேரிங்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது, வெளிநாடுகளில் கார் ரேஸில் செம பிஸியாக உள்ளார். இவரது சினிமா பயணம், கார் ரேஸில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்தது ஆகியவற்றை பாராட்டும் வகையில், மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சரிவைச் சந்தித்தது. அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. இந்நிலையில், அஜித் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேட்டி ஒன்றில் பேசியது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு பிறந்ததில் இருந்து அஜித் குறித்த தகவல்கள், அவர் நடித்த படங்கள் குறித்த அப்டேட்டுகள், கார் ரேஸ்க்கு அவர் தயாராவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள், அஜித்தின் பேட்டிகள் என தொடர்ந்து ஏதாவது வந்து கொண்டுதான் உள்ளது. அஜித் இரண்டு படங்களில் நடித்து, அதில் டப்பிங் வரை அவரது பணிகள் அனைத்தும் முடித்துக் கொடுத்துவிட்டு, கார் ரேஸில் களமிறங்கியுள்ளார். அக்டோபர் மாதம் வரை நடைபெறும் கார் ரேஸ்க்காக, உலகம் முழுவதும் அஜித் மற்றும் அவரது கார் ரேஸ் அணி பயணிக்கவுள்ளது.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான பணிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் தீவிரமாக செய்து வருகிறார். அவ்வப்போது படம் குறித்தும் படத்தின் இசை குறித்தும் ஏதாவது அப்டேட் கொடுத்துக் கொண்டு உள்ளார்.

அஜித் - கலைப்புலி தாணு: இப்படியான நிலையில், அஜித் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பழைய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசும்போது, "2001ஆம் ஆண்டு எனது மனைவி சிங்கப்பூர் சென்றபோது இறந்துவிட்டார். எனது மனைவி இறந்த செய்தி கேட்டதும் அன்று இரவே அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டில் நாங்கள் இல்லை. காரணம் நாங்கள் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறோம். வீட்டிற்கு வந்த அஜித் நாங்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக, அவரது மனைவி ஷாலினியுடன் நடுரோட்டில் அவர்கள் வந்த காரில் காத்துக் கொண்டு இருந்தார்கள். மற்ற நடிகர்கள் இப்படி காத்துக் கொண்டு இருப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அஜித் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கொண்டு இருந்தது என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது" என பேசினார்.

அடுத்த படங்கள்: கலைப்புலி தாணு கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித்தின் இந்த செயல் குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் வரை பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், டிரைன். மிஷ்கின் இயக்கி, விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் தாணு, தனது அடுத்த படமான வாடிவாசல் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











