Kamal - என்ன ஆண்டவரே இதெல்லாம் நியாயமா?.. தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் கொடுத்த கமல்.. முழு விவரம் உள்ளே

சென்னை: Kamal Haasan(கமல் ஹாசன்) நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அவர் மீது மிகுந்த மரியாதையை வைத்து அவரது நடிப்புக்கு தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

Kamal Haasan gave One Ruppee Cheque to producer Kalaipuli Thanu

கமல் லைன் அப்: கடைசியாக அவரது நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2, தக் லைஃப், ஹெ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவை வெளியாகவிருக்கின்றன. பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் சினிமாவில் மீண்டும் பிஸியாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆளவந்தான்: கமல் ஹாசன் தான் நடிக்கும் படம் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை புதிதாக முயற்சி செய்வார். அந்தவகையில் அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் ஆளவந்தான். சைக்கோபாத் த்ரில்லர் ஜானரில் அந்தக் கதையை அவர் எழுத திரைக்கதையையும் அவரே அமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். 2001ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் அப்போது சரியாக போகவில்லை.

இருந்தாலும் இந்தப் படமும் பல வருடங்கள் கழித்து இப்போது அந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அவர் புகுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்தப் படம் விரைவில் ரீ ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நஷ்டம்: இப்போது படத்தை ரீ ரிலீஸ் செய்தாலும் அந்தப் படத்தால் தாணுவுக்கு நஷ்டம் வந்தது என்பதுதான் உண்மை. அவரேகூட ஒரு பேட்டியில் ஆளவந்தான் இல்லை என்னை அழிக்க வந்தான் என்று கூறியிருந்தார். அதேபோல் பம்மல் கே சம்பந்தம் கதையை என்னிடம் சொல்லிவிட்டு ஆளவந்தான் கதையை ஷூட் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றும் தாணு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நியாயமா ஆண்டவரே: இந்நிலையில் ஆளவந்தான் படத்தால் தாணுவுக்கு நிகழ்ந்த மற்றொரு மோசமான அனுபவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஆளவந்தான் பட வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில் கலைப்புலி தாணுவை சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தாணு, 'தம்பி ஒரு படத்தின் ஆடியோ ரைட்ஸை எவ்வளவுக்கு வாங்குவீர்கள்' என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பாலு தெரியவில்லை என்று சொல்ல; சும்மா தோராயமா சொல்லுங்க என தாணு கேட்க; பாலு 3 லட்சம் ரூபாய் என்று சொல்லியிருக்கிறார். உடனே கலைப்புலி தாணு, '3 லட்சம் ரூபாய் என்பது நல்ல தொகைதான் தம்பி. ஆனால் ஒரு படத்தின் ஆடியோ ரைட்ஸை ஒரு ரூபாய்க்கு நான் விற்றிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா' என்று கேட்டுவிட்டு; ஆளவந்தான் ஆடியோ ரைட்ஸுக்காக ஒரு ரூபாய்க்கு கமல் கொடுத்த செக்கை எடுத்து டேபிளில் வைத்தாராம் தாணு.

இதனை பார்த்த செய்யாறு பாலு அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். அந்த அளவுக்கு ஆளவந்தான் மோசமான அனுபவத்தை தாணுவுக்கு கொடுத்ததாம். இந்தத் தகவலை செய்யாறு பாலுவே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X