வெறும் 350 ரூபாய் சம்பளம்.. குருநாதரிடமே சண்டை பிடித்த கமல்ஹாசன்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: இயக்குநர் சிகரம் என கொண்டாடப்பட்ட கே. பாலச்சந்தர் சினிமாவில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் அவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு வெறும் ₹500 தான் சம்பளமாக தருவாராம்.
ஆனால், கமல்ஹாசனுக்கு ஒரு படத்தில் வெறும் 350 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்தார் என்றும் அதற்காக பாலச்சந்தரிடம் கமல்ஹாசன் சண்டையே பிடித்தார் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இரு ஆளுமைகளை தமிழ் சினிமாவில் உருவாக்கிய பெருமை பாலச்சந்தருக்கே உரித்தானது. ஆனால், சம்பளம் விவாகரத்தில் அவர் ரொம்பவே கஞ்சன் என்றும் கூறுகின்றனர்.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்: எம்ஜிஆர் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்தாய் படத்தில் திரைக்கதை ஆசிரியராக சினிமாவில் அறிமுகமானவர் தான் கே. பாலச்சந்தர். சர்வர் சுந்தரம், பூஜைக்கு வந்த மலரே உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய பாலச்சந்தர் நாகேஷை வைத்து முதன் முதலாக 1965 ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நாகேஷ் படங்கள்: நீர்க்குமிழி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், நவக்கிரகம் உள்ளிட்ட பல படங்களை நாகேஷை வைத்து இயக்கி இருந்தார். குறைவான பட்ஜெட்டில் தரமான படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து முன்னணி இயக்குநராக மாறியவர் பாலச்சந்தர்.
500 ரூபாய் தான் சம்பளம்: தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக பாலச்சந்தர் வழங்கி வந்ததாக சினிமா பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர். மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த், நாசர் என யாரை அறிமுகப்படுத்தினாலும் பாலச்சந்திரன் அவர்களுக்கு 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக தருவார் எனக்கூறியுள்ளார்.
கமலுக்கு 350 ரூபாய் மட்டுமே: நாகேஷை வைத்து பல படங்களை இயக்கி வந்த பாலச்சந்தர் 1973-ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்னும் படத்தின் மூலம் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தினார். அந்த படத்திற்கு கமலுக்கு வெறும் 350 ரூபாய் மட்டுமே சம்பளமாக பாலச்சந்தர் வழங்கியதாகவும் அதற்காக பாலச்சந்தருடன் கமல்ஹாசன் சண்டை பிடித்ததாகவும் சொல்வார்கள் என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
சண்டை பிடித்த கமல்: கே. பாலசந்தரை தான் உலகநாயகன் கமல்ஹாசன் இன்றளவும் குருநாதராக போற்றி பாராட்டி வருகிறார். ஆனால், அரங்கேற்றம் படத்திற்கு வெறும் 350 ரூபாய் சம்பளமாக பாலச்சந்தர் கொடுத்த நிலையில், 40 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன் இன்னொரு 150 சேர்த்து கொடுங்க எனக் கேட்டு சண்டை பிடித்தாராம். அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் போடா என பாலசந்தர் கூறிவிட்டாராம். அப்படி உருவான கமல்ஹாசன், ரஜினிகாந்த் தான் இன்று பல கோடி சம்பளம் வாங்கி வருகின்றனர். கோபப்பட்டு நடிக்காமல் போயிருந்தால், விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருக்காது என்றும் அடுத்து இந்தியன் 2 வரப்போகுது பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தும் என்றும் கூறியுள்ளார். அந்த காலத்தில் சம்பளத்தை எல்லாம் பெரிதாக பார்க்காமல் திறமையை மட்டுமே பார்த்ததால் தான் பல சிறந்த கலைஞர்கள் சினிமாவுக்கு வந்தனர் என்கிறார்.


Click it and Unblock the Notifications











