ரஜினி மாதிரி ஆளே இல்ல.. நான் கஷ்டப்பட்டு செய்வது அவர் வந்தாலே நடக்கும்.. கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ரஜினி பற்றி கமல் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

இந்திய சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்பவர்கள் ரஜினியும், கமலும். இரண்டு பேருமே கே.பாலசந்தரின் அறிமுகங்கள்தான். ரஜினி வருவதற்கு முன்னதாகவே கமல் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் ஒருகட்டத்தில் இரண்டு பேரும் பிரிந்து நடிக்க முடிவு செய்தார்கள். கமல்ஹாசனோ கொஞ்சம் கமர்ஷியல் படங்களிலும் நிறைய ஆர்ட் சினிமாக்களிலும் நடித்தார். ரஜினியோ முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார்.

இரண்டு பேருமே வளர்ச்சி: இரண்டு பேரும் வெவ்வேறு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே வளர்ந்தார்கள். அவர்களுக்கு தொழில் போட்டி இருந்தது உண்மைதான். அதேசமயம் பொறாமை என்பது சற்றும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையொருவர் புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் நட்பையும் திரைத்துறையில் பலரும் மதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேகூட தங்களது நட்பை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.

இப்போதைய படங்கள்: ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடிக்கவிருக்கிறார். கமலை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் கடைசியாக நடித்தார். கடந்த ஐந்தாம் தேதி வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்தது அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Praised Rajinikanth at Throwback Interview
Photo Credit:

பலரும் ஆச்சரியம்: ரஜினிக்கும், கமலுக்கும் 70 வயதுக்கு மேலாகிவிட்டது. இந்த வயதிலும் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து நடித்துவருவதும்; சினிமாவில் தீவிரமான தேடலில் இருப்பதையும் கண்டு ரசிகர்களும், வளர்ந்துவரும் நடிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. அடுத்து வெளியாகவிருக்கும் ரஜினி மற்றும் கமல் படங்கள் அவர்களுக்கு மேற்கொண்டு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்களது ரசிகர்கள்.

சேர்ந்து நடிப்பார்களா?: இது ஒருபக்கம் இருக்க ரஜினியும், கமலும் தங்களது கரியரின் ஆரம்பத்தில் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சில காரணங்களால் பிரிந்து நடித்த அவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாகும். இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கமலின் பேச்சு: அவர் பேசுகையில், "ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே ரசிகர்களை வென்றெடுக்க முடியும் என்று அவர் தாதா சாகேப் பால்கே விருது வென்றபோது கூறினேன். அப்படி எத்தனை பேரால் செய்ய முடியும். அவர் ஸ்க்ரீனில் வந்தாலே ரசிக்கிறார்கள் என்பது ஒருவிதமான பெர்சனாலிட்டி கல்ட்தானே. அவரை மாதிரி ஒரு ஆளே சினிமாவில் இல்லை. நான் கஷ்டப்பட்டு செய்வதெல்லாம் அவர் திரையில் வந்தாலே நடக்கிறது" என்றிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X