Kamal Haasan: இதனால் தான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கவில்லை... ஷங்கரை சோலி முடித்த கமல்ஹாசன்
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக தான் 'இந்தியன் 2' உருவாகி வருகிறது.
ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்திலும் கமல் தான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
ஆனால், ஜென்டில்மேன் கதையை கேட்ட பின்னர் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜென்டில்மேன் படத்தில் இருந்து விலகிய கமல்ஹாசன்
1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் அசிஸ்டெண்ட் இயக்குநராக வேலை பார்த்த ஷங்கர், தனது முதல் படத்திலேயே மேக்கிங்கில் திரும்பிப் பார்க்க வைத்தார். அர்ஜுன், கவுண்டமணி, மதுபாலா, நம்பியார், வினீத் உள்ளிட்ட பலர் ஜென்டில்மேன் படத்தில் நடித்திருந்தனர்.
டாக்டர் கனவில் வலம் வரும் அர்ஜுன், இறுதியாக கொள்ளையனாக மாறி மருத்துவக் கல்லூரி கட்டுவதாக முடித்திருப்பார் இயக்குநர் ஷங்கர். அர்ஜுனின் ஆக்ஷன், ஏஆர் ரஹ்மானின் பாடல்களால் ஜென்டில்மேன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் என சொல்லப்படுவதுண்டு. அது உண்மைதான் என்றாலும், கமல்ஹாசனுக்கும் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க ஆஃபர் சென்றுள்ளது.
ஆனால், கமல்ஹாசன் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதுகுறித்து கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், ஷங்கர் தனது முதல் படமான ஜென்டில்மேனில் தன்னை நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் அவரை அழைத்து கதை கேட்டேன், ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டேன் என்றுள்ளார்.

அதாவது ஜென்டில்மேன் படத்தின் மையக்கரு கல்வி இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாக இருக்கும். மருத்துவர் கனவில் வலம் வரும் ஹீரோ கிச்சா, ரிசர்வேஷன் முறையால் அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்காமல் கொள்ளையனாக மாறுவார். மேலும், கொள்ளையடித்த பணத்தில் மருத்துவக் கல்லூரியே கட்டிவிடுவார். இந்த கல்வி இடஒதுக்கீடு குறித்த ஷங்கரின் புரிதல் பிடிக்காமல் தான் ஜென்டில்மேன் படத்திற்கு நோ சொன்னாராம் கமல்.
அதன்பின்னர் இந்தியன் படத்திற்காக ஷங்கர் சென்ற போதும் அவரிடம் முழுமையாக கதை கேட்ட பின்னரே கமல் ஓக்கே கூறியுள்ளார். அதேநேரம், அதிலும் சில மாற்று கருத்து இருந்ததாகவும், ஷங்கர் அதில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் இந்தியன் படத்தில் நடித்ததாகவும் கமல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











