அறிவாளினு கமலே வெளில சொல்லிக்கிறார்.. ரஜினி அப்படி இல்லை.. என்ன கமலின் அண்ணனே இப்படி சொல்றாரு?

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாகவும்; தமிழ் சினிமாவின் தூண்களாகவும் இருப்பவர்கள். இரண்டு பேரும் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக தங்களுடைய இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல்; பலருக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்துகொண்டிருப்பவர்கள். இந்தச் சூழலில் கமல் ஹாசனின் அண்ணன் சாரு ஹாசன் கொடுத்திருந்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடித்தார்கள். ரஜினி சினிமாவுக்குள் வந்தபோது கமல் ஹாசன் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள நடிகர். அவரைப் பார்த்து நடிப்பை கற்றுக்கொள்ள பாலசந்தர் தனக்கு அறிவுறுத்துவார் என்று ரஜினி அடிக்கடி பேட்டிகளில் சொல்லியதுண்டு. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன.

Throwback Stories Rajinikanth Kamal Haasan

பிரிந்த கூட்டணி: நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் வியாபாரம் பாதிக்கப்படும்; அதுவே பிரிந்து நடித்தால் இரண்டு பேருமே வளரலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்த இரண்டு பேரும்; தற்போது பெரும் விருட்சமாக மாறி நிற்கிறார்கள். கமல் ஹாசன் சோதனை முயற்சி ப்ளஸ் கமர்ஷியல் முயற்சியை மேற்கொள்ள; ரஜினிகாந்த்தோ கமர்ஷியல் ஹீரோவாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் வராத சண்டைகளே இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் மிகச்சிறந்த நண்பர்கள்.

நட்புக்கு உதாரணம்: தனக்கு எடுக்கப்பட்ட ஒரு விழாவில்கூட, தன்னையும் ரஜினியையும் போல் நண்பர்கள் தற்போதைய தலைமுறை நடிகர்களில் இல்லை என்று பகிரங்கமாக கூறினார் கமல். அதேபோல் கமல்தான் தன்னைவிடவும் சிறந்த நடிகர் என்று ரஜினியும் கூறியிருக்கிறார். முக்கியமாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில், தான் பேச ஆரம்பிக்கும்போது கமல்ஹாசனை பார்த்து, நீங்கள் அமர்ந்துகொள்கிறீர்களா சேர் வேணுமா கமல் என்று ரஜினி கேட்டபோது அவர்களுக்குள் இருந்த நட்பை பார்த்து ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.

தற்போதைய படங்கள்: ரஜினி கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது கூலி படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கிடையே ரசிகர்களிடம் பொதுவான ஒரு கருத்து உண்டு. அதாவது கமல்ஹாசன் மேடைகளில் பேசுவது எப்போதும் புரியாது; அதேசமயம் ரஜினிகாந்த் பேசுவது புரியும் என்பதுதான் அது. இந்நிலையில் கமலின் அண்ணன் சாரு ஹாசன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சாரு ஹாசன் பேட்டி: இந்நிலையில் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரஜினிகாந்த்தை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள். வசூலை நீங்கள் கணக்கு செய்து பாருங்கள். ரஜினி படத்தை 65 பேர் பார்த்தால் மீதி பேர்தான் கமலின் படத்தை பார்ப்பார்கள். அதேபோல் கமல் பேசும்போது தனக்கு இதெல்லாம் தெரியும் என்று சொல்வார். ஆனால் ரஜினி தனக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்வார். பெரிய அறிவாளியாக திகழும் ஒருவரை யாருக்கும் பிடிக்காது. காந்தி மாதிரி இருக்க வேண்டும். முக்கியமாக தான் ஒரு அறிவாளி என்று கமல்ஹாசன் வெளியே சொல்லிக்கொள்வார். ஆனால் ரஜினிகாந்த் அப்படி வெளியே சொல்லிக்கொள்ளமாட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X