தற்கொலைக்கு முயன்றாரா கமலின் முன்னாள் மனைவி?.. காரணம் கௌதமியா?.. இது வேற நடந்திருக்கா?
சென்னை: கமல் ஹாசன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் பிஸியாக இருக்கும் அவர் கடைசியாக் அமரன் படத்தை தயாரித்தார். மேலும் சிம்பு நடிக்கவிருக்கும் எஸ்டிஆர் 48 படத்தையும் அவர் தயாரிக்கிறார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் பற்றிய பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஷாக்கை கொடுத்திருக்கிறது.
சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்த அவரது நடிப்பு பயணம் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது. சினிமாவில் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதோவொரு புதிய முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பவர். அது வெற்றி பெறுகிறதோ இல்லை தோல்வியடைகிறதோ தனது சோதனை முயற்சியை மட்டும் அவர் எப்போதும் கைவிட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கமல்: தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்த அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் காரணமாக நடிப்புக்கு சில காலம் முழுக்கு போட்டிருந்தார். ஆனால் அரசியல் களத்தில் கமல் ஹாசன் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. எனவே அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட்டாகிவருகிறார் அவர்.
தக் லைஃப்: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். படம் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பானது. அதற்கு பதிலாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
பெர்சனல் வாழ்க்கை: மேலும் அமரன் படத்தை தயாரித்த அவர் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 படத்தையும் தயாரிக்கிறார். இதற்கிடையே முதலில் அவர் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்தார். அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அவரை பிரிந்த கமல் அடுத்ததாக நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் பிறந்தார்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள்.
தற்கொலைக்கு முயன்ற சரிகா: சரிகாவுடனான கமலின் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில்தான் முடிந்தது. சூழல் இப்படி இருக்க புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது சரிகாவை திருமணம் செய்த பிறகு நடிகை கௌதமியுடன் கமலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கத்தை அவர்கள் லிவிங் டூ கெதர்வரை கொண்டு சென்றார்கள். இதனை தெரிந்துகொண்ட சரிகா மனம் ஒடிந்து தனது வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாராம். நல்வாய்ப்பாக காயங்களுடன் அவர் தப்பியிருக்கிறார். இதனையடுத்துதான் கமலுடனான திருமண வாழ்க்கையை சரிகா முடிவுக்கு கொண்டுவந்தாராம்.
முன்னதாக சரிகாவை பிரிந்த பிறகு கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார் கமல். கௌதமிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்ததும்; ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு கமல் ஹாசன் - கௌதமி லிவிங் ரிலேஷன்ஷிப்பும் பாதியில் முடிவடைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











