Kamal Hassan: ”உயிருக்குப் போராடிய பிரபல நடிகர்..” இரண்டு மணி நேரத்தில் கமல் செய்த உதவி!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய நடிகருக்கு கமல் உதவியது குறித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
இரண்டு மணி நேரத்தில் உதவிய கமல்ஹாசன்: திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்தும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடுவதில் சகலகலா வல்லவன் உலக நாயகன் கமல். களத்தூர் கண்ணம்மா முதல் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வரை, கமல் தனித்து நிற்கிறார். பல வித்தியாசமான முயற்சிகளிலும் அவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

அதேபோல், சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்வது கமலின் குணம். அதேபோல், திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் உதவி செய்து வருகிறார் கமல்ஹாசன். சமீபத்தில் கூட உயிரிழந்த ஜூனியர் பாலையாவின் மகன், கமல்ஹாசன் தான் என்னுடைய அப்பாவின் மருத்து செலவுக்கு உதவியதாகக் கூறியிருந்தார். இதேபோல், தமிழ் திரையுலகில் பல கலைஞர்களுக்கு கமல் உதவியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் கமலின் உதவியால் பலர் பயனடைந்துள்ளனர். அப்படி அவர் உதவி செய்தது குறித்து பிரபல நடிகரின் மகன் மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சோமன். இந்திய விமானப் படையில் வேலைப் பார்த்த அவர், பின்னர் நாடகத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.
குறிப்பாக ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை சோமனுக்கு உள்ளது. அதாவது 1978ம் ஆண்டில் மட்டும் சோமன் 42 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளாராம். இப்படி பல வகைகளில் பிரபலமான நடிகராக வலம் வந்த சோமன், 1997ம் ஆண்டு மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, விஷயம் தெரிந்த கமல் இரண்டு மணி நேரத்தில் சோமனின் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சோமனின் மகன், கமல் முன்னிலையில் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், "என்னோட அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே கமல் சாரை தொடர்புகொண்டு மெடிக்கல் ரிப்போர்ட் பேக்ஸ் செய்தோம், இரண்டு மணி நேரத்தில் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார், அதனை மறக்கவே மாட்டேன் ரொம்ப நன்றி" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











