KamalHassan: கமல் பெயரில் இருக்கும் ‘ஹாசன்’ யாருன்னு தெரியுமா..? இதுவரை வெளியே தெரியாத டாப் சீக்ரெட்

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது சினிமா, பிக் பாஸ், அரசியல் என பிஸியாக வலம் வருகிறார். இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 என அடுத்தடுத்து 4 படங்கள் கமலின் லைன்-அப்பில் உள்ளன.

இந்நிலையில் கமலின் பெயரில் உள்ள 'ஹாசன்' யாருடைய பெயர் என தற்போது தெரியவந்துள்ளது. கமல் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் அனைவருக்கும் 'ஹாசன்' என பெயர் வைக்கப்பட்டதற்கு, ஒரு முஸ்லிம் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 Kamal Hassan: Why Kamal has added ‘Hassan’ to his name

கமல் பெயரில் இருக்கும் 'ஹாசன்' : இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் கமல்ஹாசனும் மிக முக்கியமானவர். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல், இன்று ரசிகர்களால் உலகநாயகனாக கொண்டாடப்படுகிறார். கடந்தாண்டு வெளியான விக்ரம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 படங்களிலும், இன்னொரு பக்கம் பிஸ் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பிஸியாக உள்ளார்.

சினிமா, பிக் பாஸ், அரசியல் என ஆல் ரவுண்டராக மாஸ் காட்டும் கோலிவுட் ஆண்டவர் கமல், சினிமாவில் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில், அவரது பெயரில் இருக்கும் 'ஹாசன்' என்பதன் பின்னணி பற்றி தற்போது தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் என்ற பெயரை வைத்து சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்கள் பலரும் அவரை முஸ்லிம் என நினைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.

சில நேரங்கள் கமல்ஹாசன் இல்லை 'கமால் ஹாசன்' என்றும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. கமல் மட்டுமின்றி அவரது அண்ணன்கள் பெயரிலும் ஹாசன் என்பது இடம்பெற்றிருக்கும். சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் என, கமலின் குடும்பத்துக்கு திரையுலகில் 'ஹாசன் ஃபேமிலி' என்ற புனைப் பெயரும் இருந்தது. கமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அவரது சாதிய பின்னணி குறித்து ரசிகர்களுக்கு உறுதியாக தெரியும்.

அப்படி இருந்தாலும் கமல் பெயரில் வரும் 'ஹாசன்' யார் என்பது பலரும் அறியாத ஒன்று. அதுபற்றி கமலின் அண்ணன் சாருஹாசன் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, "ஸ்ரீனிவாச அய்யங்கார் என்பவரின் மகன்களான எங்களது பெயரில் 'ஹாசன்' என இருப்பதற்கு அப்பாவின் இஸ்லாமிய நண்பர் தான் காரணம்" எனக் கூறியுள்ளார். இந்து - முஸ்லிம் ஒற்றுமையில் அதிக விருப்பம் கொண்டிருந்த கமலின் அப்பாவுக்கு, ஹாசன் என்ற முஸ்லிம் நண்பர் ஒருவர் இருந்துள்ளார். அவர் நண்பராக மட்டும் இல்லாமல் நல்ல குருவாகவும் கமல் அப்பாவை வழிநடத்தினாராம்.

 Kamal Hassan: Why Kamal has added ‘Hassan’ to his name

அதனால் தனது நண்பரும் குருவுமான ஹாசனின் பெயரை மகன்களுக்கு சூட்ட வேண்டும் என கமலின் அப்பா முடிவெடுத்துள்ளார். அப்படியே 1931ம் ஆண்டு பிறந்த முதல் மகனுக்கு சாருஹாசன், அதன்பிறகு சந்திரஹாசன், கமல்ஹாசன் என மூவருக்கும் 'ஹாசன்' என்ற தனது முஸ்லிம் நண்பரின் பெயரை இணைத்து பெயர் சூட்டினாராம். அப்படியே தங்களது குடும்பத்துக்கு 'ஹாசன் ஃபேமிலி' என்ற அடைமொழி வந்ததாக சாருஹாசன் கூறியுள்ளார்.

சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து 'சு'ஹாசி'னி, அனு'ஹாசன்' என அடுத்த தலைமுறையினருக்கும் 'ஹாசன்' என்ற பெயர் வரும்படி கமலின் அப்பா கவனம் செலுத்தியுள்ளார். ஆகமொத்தம் கமலின் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஹாசன் என்பவர், அவர்களது குடும்ப நண்பரான இஸ்லாமியர் ஒருவர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X