Kamal: இந்தியில் பஞ்ச் டயலாக் பேசிய சல்மான் கான்... தமிழில் தக் லைஃப் கொடுத்த கமல்... யாருகிட்ட..!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கமல் தக் லைஃப் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியில் பஞ்ச் டயலாக் பேசிய சல்மான் கானுக்கு மேடையில் வைத்தே தமிழில் கவுண்டர் அட்டாக் கொடுத்துள்ளார் கமல்.
சல்மான் கானுக்கு தக் லைஃப் கொடுத்த கமல்
இந்தியன் 2, பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்ததும் தக் லைஃப் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் கமல். மணிரத்னம் இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனிடையே கமல்ஹாசன் நடிக்கும் கல்கி திரைப்படம் பான் இந்தியா ஜானரில் இந்தியிலும் வெளியாகிறது. கமல் தனது ஆரம்ப காலங்களில் பல இந்தி படங்களில் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

ஏக் துஜே கேலியே போன்ற கமலின் இந்திப் படங்கள் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் தூக்கத்தையே இல்லாமல் செய்துவிட்டது. இதனால் கமலுக்கு எதிராக மறைமுகமாக அரசில் செய்தே அவரை அங்கிருந்து ஃபீல்ட் அவுட்டாக செய்துள்ளனர் பாலிவுட் ஹீரோக்கள். இருப்பினும் புதிய முயற்சிகள் செய்து தமிழில் பல தரமான படங்களை கொடுத்துள்ளார் கமல்ஹாசன். அதனால் தான் அவர் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கமல் தக் லைஃப் கொடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சொந்தமாக டப்பிங் பேசி நடிப்பவர் கமல்ஹாசன். அதனால் அவர் பான் இந்தியா மொழிகளில் சரளமாக பேசுவதை பார்க்க முடியும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் கானுக்கு தக் லைஃப் கொடுத்துள்ளார் கமல்.
அதாவது ஒரு நிகழ்ச்சியில் தான் நடித்த படத்தில் இருந்து பஞ்ச் டயலாக் ஒன்றை இந்தியில் பேசி காட்டுகிறார் சல்மான் கான். அந்த வசனத்தை தமிழில் சல்மான் கான் பேச முடியுமா என கேட்கும் கமல், அவரே ட்ரான்ஸ்லேட் செய்து வம்பிழுத்தார். அதன்படி, சல்மான் கான் பேசிய பஞ்ச் டயலாக்கை கமல் தமிழில், "ஒருவாட்டி கமிட் பண்ணிட்டேனா அப்புறம் நானே சொன்னாலும் கேட்க மாட்டேன்.." மொழிபெயர்க்கிறார்.
மேலும் அதனை திருப்பி சொல்ல முடியுமா என சல்மான் கானிடம் சவால் விடுகிறார் கமல். அதனை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் திக்கித் திணறி தமிழில் பேச, அரங்கமே அதிர்கிறது. அதன்பின்னர் அதே வசனத்தை கமல் மலையாளத்தில் சொல்லி கொடுக்க, சல்மான் கானால் அப்படியே பேச முடியாமல் எஸ்கேப் ஆகிறார். இந்தியில் பஞ்ச் டயலாக் பேசிய சல்மான் கானுக்கு தமிழ், மலையாளத்தில் தக் லைஃப் கொடுத்த கமலின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











