Kamal: "விருமாண்டிக்காக கமல் பண்ணது யாருக்கும் தெரியாது... அந்த சீன்ல பார்த்தீங்கன்னா!!”

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம் விருமாண்டி.

கமல் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படம், பல தடைகளைத் தாண்டி 2004ம் ஆண்டு வெளியானது.

தமிழ் சினிமாவில் ரொம்பவே தனித்துவமான படமாக விருமாண்டி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக கமல் செய்த சில ரகசியங்களை மனம் திறந்துள்ளார் பேராசிரியர் ஞானசம்பந்தம்.

 Kamal: Professor Gnanasambandam opens up about Kamals secret for Virumaandi

விருமாண்டி ரகசியம் இதுதான்: இந்திய சினிமாவில் ஏராளமான புதிய முயற்சிகளை செய்து காட்டியதில் கமல்ஹாசனும் ஒருவர். உலகநாயகன் கமல் என்ற அடைமொழிக்கு ஏற்றவாறு இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அவைகளில் கமலே இயக்கி நடித்த விருமாண்டி மிக முக்கியமான படமாகும். 2004ம் ஆண்டு வெளியான விருமாண்டி, கோலிவுட் மட்டுமின்றி இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அசலான கிராமத்துப் பின்னணியில் கல்ட் கிளாஸிக் சினிமாவாக உருவான விருமாண்டி, திரைக்கதை, மேக்கிங், கமலின் நடிப்பு, இளையராஜாவின் இசை என எல்லாவிதத்திலும் கொண்டாடப்பட்டது. ஒரே சம்பவத்தை இருவரது பார்வையில் இருந்து விவரிக்கும் திரைக்கதை, ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. முன்னதாக இந்தப் படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டதால், பல தடைகளுக்குப் பின்னர் விருமாண்டி என பெயர் மாற்றப்பட்டு வெளியானது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து கமலின் நெருங்கிய நண்பரான பேராசிரியர் ஞானசம்பந்தம் மனம் திறந்துள்ளார். விருமாண்டியில் ஜல்லிக்கட்டு வர்ணனையாளராக நடித்திருந்தார் ஞானசம்பந்தம். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தின் நேட்டிவிட்டிக்காக கமலுடன் அதிகம் பயணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில், விருமாண்டி படத்துக்காக கமல் பண்ணதெல்லாம் கொஞ்சம் நஞ்சமல்ல என்றுள்ளார்.

அதாவது, விருமாண்டி படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகள் அதிகம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக கமல்ஹாசனை அழைத்துக்கொண்டு பல கிராமங்களுக்குச் சென்றாராம் ஞானசம்பந்தம். கமல் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, கெட்டப்பை அப்படியே மாற்றிவிட்டாராம். அதாவது தலையில் பெரிய போர்ச்சுக்கீசிய தொப்பி, கூலிங் கிளாஸ், பெர்முடாஸ் டவுசர் போட்டு வருவார்.

கமல்ஹாசனை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால், எல்லாரும் என்னிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கமல் சிரிப்பார். அப்படி விருமாண்டி படத்துக்காக மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள் என பலரையும் சந்தித்ததாகக் கூறியுள்ளார். அதேபோல், மூக்கணாங்கயிறு கட்டிய மாடுகள் தான் இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. MGR காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்ததை மாற்றிய படம் விருமாண்டி. இதில் தான் மூக்கணாங்கயிறு இல்லாத காளைகளை கமல் நடிக்க வைத்ததாக ஞானசம்பந்தம் கூறியுள்ளார்.

மேலும், விருமாண்டி படத்தில் campacola set-இல் மாடு கூட ஒரு காட்சி எடுக்கும் போது, கமல் சார் கையை கொம்பு பெரிதாக கிழித்துவிட்டது. அதில் அவரது கையின் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும், ஷூட்டிங்கை நிறுத்தாமல், கட்டு போட்டுவிட்டு தொடர்ந்து நடித்தார். ஷூட்டிங்ல ஆயிரம் பேர் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என கமல் சின்சியராக இருந்ததாக ஞானசம்பந்தம் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X