Kamal: ‘சிகப்பு ரோஜாக்கள்' ஹீரோ... பாரதிராஜாவின் சாய்ஸ் அந்த நடிகரா..? தவறு என நிரூபித்த கமல்!

சென்னை: கமல்ஹாசன் - பாரதிராஜா கூட்டணியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்.

1978ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் கமல்ஹாசனின் சைக்கோபாத் நடிப்பு படு மிரட்டலாக இருந்தது.

உலகநாயகன் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த சிகப்பு ரோஜாக்கள், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் கமலுக்கு முன்னர் இன்னொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்க பாரதிராஜா முடிவு செய்து வைத்திருந்தாராம்.

 Kamal: Sivakumar was originally slated to replace Kamal in Sigappu Rojakkal

சிகப்பு ரோஜாக்கள் முதல் ஹீரோ: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் உலகநாயகன் கமலும் ஒருவர். தனது சினிமா கேரியரில் கமல்ஹாசன் நடிக்காத பாத்திரங்களே இல்லை எனலாம். அதிலும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போதே, பல புதிய முயற்சிகளையும் வித்தியாசமான பாத்திரங்களிலும் நடித்து மிரட்டியிருந்தார். அப்படி கமல்ஹாசன் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது சிகப்பு ரோஜாக்கள்.

1978ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. சப்பாணி என்ற கேரக்டரில் கமல்ஹாசனும் மயிலு பாத்திரத்தில் ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். அதேபோல், இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் பரட்டை என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

16 வயதினிலே படத்துக்குப் இரண்டு படங்களையும் கிராமத்துப் பின்னணியில் இயக்கிய பாரதிராஜா, அடுத்ததாக 'சிகப்பு ரோஜாக்கள்' மூலம் மிரட்டியெடுத்தார். திலீப் என்ற சைக்கோ கேரக்டரில் கமல்ஹாசனும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். சிறு வயதில் பெண்களால் ஏற்பட்ட சில மோசமான அனுபவங்களால் மனச்சிதைவு அடையும் கமல், பின்னாளில் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவாக நடித்திருந்தார்.

 Kamal: Sivakumar was originally slated to replace Kamal in Sigappu Rojakkal

இந்தப் படத்தில் டிரஸ்ஸிங், கெட்டப், ஸ்டைலிஷ் லுக் என கமல் ரொம்பவே வித்தியாசமாக நடித்திருந்தார். முக்கியமாக அவரது சைக்கோபாத் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். கமல்ஹாசன் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது சிகப்பு ரோஜாக்கள். ஆனால், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க பாரதிராஜா முதலில் கமல்ஹாசனை தேர்வு செய்யவில்லையாம்.

அவரது முதல் சாய்ஸ்ஸாக இருந்தது நடிகர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் பிஸியான நடிகராக வலம்வந்த சிவகுமாருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பாரதிராஜா விரும்பியுள்ளார். ஆனால், சிகப்பு ரோஜாக்கள் கதையை கேட்ட சிவகுமாரோ, இதுபோன்ற நெகட்டிவ் ரோல்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாராம்.

அப்போது தான் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து, அதில் திருப்தியில்லாமல் இருந்துள்ளார் சிவகுமார். அதனால், சிகப்பு ரோஜாக்கள் கதையை சிவகுமார் ரிஜக்ட் செய்துவிட, அவருக்குப் பதிலாக கமல்ஹாசனை நடிக்க வைத்துள்ளார் பாரதிராஜா. இவரது முதல் சாய்ஸ் தவறானது என்பதை தனது அசுரத்தனமான நடிப்பால் உணர வைத்தார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X