Kamal Haasan - இயக்குநர் சொல்லியும் கேட்காத கமல்.. பிளாஸ்டிக் சர்ஜரி வரை போன சம்பவம்.. விவரம் உள்ளே

சென்னை: Kamal haasan (கமல் ஹாசன்) இயக்குநர் சொல்லியும் கேட்காமல் ரிஸ்க் எடுத்த கமலுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் சினிமாவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி விக்ரம் ரிலீஸுக்கு முன்னதாக ரிலீஸான பல தமிழ் படங்கள் தோல்வியடைந்திருந்தன. விக்ரம் வந்த பிறகுதான் அந்த நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது.

Kamal took a risk without even asking the director underwent plastic surgery

உற்சாக கமல்: விக்ரம் கொடுத்த வெற்றியால் பெரும் உற்சாகம் கமலுக்கு தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் தூசு தட்டப்பட்டது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், ஹெச்.வினொத் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக நடிப்பதற்கு கமிட்டும் ஆகியுள்ளார். இதனால் கமல் ஹாசனின் ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தயாரிப்பிலும் பிஸி: அதேபோல் நடிப்பு மட்டுமின்றி பட தயாரிப்பிலும் கமல் ஹாசன் பிஸி. அதன்படி சிம்பு நடிப்பில் ஒரு படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.

செம லைன் அப்: கமல் ஹாசனின் லைன் அப்பில் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் மணிரத்னத்துடன் இணைந்திருக்கும் படம் முக்கியமானதாக இருக்கிறது. கண்டிப்பாக இருவரும் சேர்ந்து நாயகன் போன்ற ஒரு படத்தை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இன்று மாலை இவர்கள் இணையும் படத்துக்கான டைட்டிலும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்க் எடுத்த கமல்: கமலை பொறுத்தவரை தன்னுடைய கதாபாத்திரத்திற்காகவும் தன்னுடைய படங்களுக்காகவும் ரொம்பவே ரிஸ்க் எடுப்பவர். அப்படி அவர் ரிஸ்க் எடுத்த சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது சகலகலா வல்லவன் படத்தில் இளமை இதோ இதோ பாடல் இன்றுவரை ஃபேமஸ். ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறப்புக்கும் இந்தப் பாடல்தான் ஒலிபரப்பப்படும்.

இந்த சூழலில் அந்த பாடலின் படப்பிடிப்பின்போது பைக்கில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு செல்ல வேண்டுமாம். அதனை டூப் ஆர்ட்டிஸ்ட் வைத்து எடுத்துக்கொள்ளலாம் என இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவிக்க அதற்கு ஒத்துக்கொள்ளாமல் தானே நடித்திருக்கிறார் கமல் ஹாசன். அப்போது கண்ணாடி அவரது முகத்தில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அவருக்கு தையல் போட வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தையல் போட்டால் தழும்பு தெரிந்துவிடும் என்பதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாம். இதனை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X