Kamal Vijay: "இளமை இதோ இதோ..” கமலுடன் ஆட்டம் போட்ட விஜய்... பார்ட்டியில் நடந்த அட்ராசிட்டி!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், இது கமலின் விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இருக்குமா எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், கமலும் விஜய்யும் பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடி அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கமலுடன் ஆட்டம் போட்ட விஜய்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்தின் Reference, லியோவில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
மேலும், விக்ரம் வரிசையில் லியோவும் லோகேஷ் யுனிவர்ஸில் இணைந்தால், கமல் நடித்திருப்பாரா அல்லது அவரது வாய்ஸ் ஓவர் இடம்பெற்றிருக்குமா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை உலகநாயகன் கமல்ஹாசனும் தளபதி விஜய்யும் ஒன்றாக ஸ்க்ரீனில் வந்தால் அது இன்னும் தரமான சம்பவமாக இருக்கும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில், கமல்ஹாசனும் விஜய்யும் ஒன்றாக நடனம் ஆடும் வீடியோவை அவர்களது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சினிமாவில் நடக்குமா என எதிர்பார்த்த ஒன்று, ரியலாகவே நடந்ததை பார்த்து சிலிர்த்துள்ளனர். கமல்ஹாசன், விஜய் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அங்கே சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற "இளமை இதோ இதோ" பாடல் ஒலிக்கிறது. அப்போது விஜய்யை நடனம் ஆடும்படி அழைக்கும் கமல், அவரும் செம்ம ஸ்டைலாக டான்ஸ் ஆடி மாஸ் காட்டியுள்ளார்.
குறிப்பாக "வாலிபத்தில் மன்மதன்... லீலைகளில் மன்னவன்... ராத்திரியில் சந்திரன்... ரசிகைகளின் இந்திரன்..." என்ற வரிகள் வரும்போது, இது எல்லாமே விஜய் தான் என்பதாக அவரை நோக்கி தனது கைகளை காட்டி டான்ஸ் ஆடுகிறார் கமல். அப்போது விஜய் வெட்கப்பட்டு சிரிப்பதும், கமல் இன்னும் ஹைப் ஏற்றிவிடுவதையும் பார்க்க செம்ம ஃபன்னாக இருக்கிறது.
கமல், விஜய் டான்ஸ் ஆடும் இந்த வீடியோ, பார்ட்டியில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும், இது சில வருடங்களுக்கு முன்னர் ஷூட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் சொல்லப்படுகிறது. இந்த மேஜிக் லியோ படத்தில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











