Kamalhaasan: நான் அதற்குதான் லாயக்கி.. கங்கை அமரனை நோஸ் கட் செய்த கமல்ஹாசன்.. அப்படி என்ன ஆச்சு!

சென்னை: கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பெருமையாகவும் உள்ளார். சினிமாவின் அனைத்து துறைகள் குறித்தும் கரைத்துக் குடித்தவர்தான் இந்தக் கமல்ஹாசன். தனது சிறு வயதில் இருந்து சினிமாதான் வாழ்க்கை என தன்னை, முழுவதுமாக சினிமாவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்த கமல், தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவிற்கே செலவு செய்தார். இப்படியான கமல் பல இடங்களில் பேசும்போது பலருக்கு ஊசி குத்தியது போல இருக்கும். அப்படியான ஒரு பதிலைத்தான், கமல்ஹாசன் கங்கை அமரனுக்கு அளித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு சினிமாவில் ஒரு துறை குறித்து தெரிந்து கொள்ள, அது குறித்து விவாதிக்க அதிகப்படியான ஆர்வமும் அக்கறையும் இருப்பதால்தான், அவர் இப்போதும் சினிமாவின் அடையாளமாக உள்ளார். இவரைப் பார்த்து சினிமாவிற்கு வந்து சாதித்த இளைஞர்கள் பல ஆயிரம். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமா, இந்திய சினிமா என இவரை எங்கு வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடி வெளிநாட்டு சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு திறமையான சினிமாக்காரன் தான் கமல் ஹாசன்.

kamalhaasan gangai amaran throwback

கமல்: ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் யாரைக் கொண்டு வந்து முன்னிருத்தி பேசினாலும், நாம் கமல்ஹாசன் என்ற ஒற்றை கலைஞனை கையில் எடுத்துக் கொண்டால் வெற்றி நமக்குதான். ஏனென்றால் நம்ம கமல் செய்த சம்பவம் அப்படி. முன்பு கூறியதைப்போல், சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிற்கே செலவு செய்து, தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியுள்ளார். இவரைப்போன்ற ஒரு கலைஞர் மற்ற சினிமா துறைகளுக்கு இனிமேல்தான் வரவேண்டும். ஆனால், கமல்ஹாசன் செய்த அளவிற்கு அவர்களின் செயல்பாடு இருக்குமா என்றால் அது கேள்விக் குறிதான்.

கங்கை அமரன்: இப்படியான நிலையில் கமல்ஹாசன் விருது நிகழ்ச்சி ஒன்றில், பாடகரும் இயக்குநருமான கங்கை அமரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தது பலரது கவனத்தினை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது ஒரு விருது மேடையில் கமல்ஹாசனை நோக்கி, கமல், நீங்க பாடல்களுக்கு இசை அமைத்தது எனக்குத் தெரியும் நான் அதனைக் கேட்டிருக்கின்றேன். ஒரு பாடலுக்கு இசை அமைப்பது குறித்து உங்களது அபிப்ராயத்தைச் சொல்லுங்கள், எனக் கேள்வி கேட்டார்.

பதில்: அதற்கு பதில் அளிக்கும்போது,” நான் ஏதோ சில நல்ல நண்பர்களின் உதவியோடு சினிமாவில் நன்றாக இருக்கின்றேன். அது உங்களுக்கு பொறுக்கவில்லை போல என பதில் அளித்தார். இந்த பதிலை கங்கை அமரன் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் மேலும் தனது கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் பாடல்கள் குறித்தோ, இசை குறித்தோ பேசத்தான் லாயக்கி மற்றபடி நான், இசை அமைக்க சரியான ஆள் இல்லை” என பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X