Kamalhaasan: கால் உடைந்து படுத்திருந்தபோதும் கமலுக்கு அடங்காத வெறி.. ஊரே அவரை இப்படி சொல்றது சரிதானே

சென்னை: கமல்ஹாசன், தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த அடையாளம். இந்திய சினிமா உலகில் இவருக்கு நிகர் இவர்தான் என கூறும் அளவிற்கு சினிமாவிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். நடமாடும் சினிமா பல்கலைகழகமாக விளங்கும் இவரை ரசிகர்கள் ஆண்டவர், உலகநாயகன் என செல்லமாக அழைத்து வந்தனர். ஆனால் அவர், தன்னை கமல்ஹாசன் என அழைத்தாலே போதும் எனக் கூறினார். கமல்ஹாசனுக்கு ஒரு முறை கால் உடைந்து வீட்டில் இருந்தார். ஒரு மாத காலம் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, அவர் என்ன செய்தார் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார்.

தனது 5 வயதில் இருந்து சினிமாவில் நடிக்கும் கமல்ஹாசன், இதுவரையிலான அவரது சினிமா வாழ்க்கையில், தொடர்ந்து, பல புதுமையான விஷயங்களை செய்துள்ளார். இவரது படங்கள் இன்றைக்கும் பலருக்கு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. யாரும் தொட அஞ்சும் கதைக்களத்தில் இருந்து தொடங்கி, சிக்கலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை படமாக்குவதில் இருந்து தொடங்கி,கமல்ஹாசனை மிஞ்ச இங்கு யாருமே இல்லை.

Kamalhaasan Kamalhaasan Throwback Kamalhaasan Speech

இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், தக் லைஃப். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததில் இருந்து, படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் ஜூன் மாதத்தில் வெளியாக வாய்ப்பு என கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், இவர் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்று, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சினிமாவில் பயன்படுத்தி எப்படி காட்சிகளை படமாக்குவது என முறையாக படித்து விட்டு வந்துள்ளார்.

கமல்ஹாசன்: இப்படி தனது சினிமா மீதான ஆர்வத்திற்கு நாளுக்கு நாள் தீனி போட்டுக்கொண்டு உள்ளார் கமல். இப்படியான நிலையில், கமல் ஹாசனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் காலில் அடிபட்டிருந்தது. எலும்பில் ஏற்பட்ட விரிசலால், ஒரு மாத காலத்திற்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். எனவே, ஒரு மாத காலத்திற்கு கமல்ஹாசன் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

Kamalhaasan Kamalhaasan Throwback Kamalhaasan Speech

ஒரு மாதம்: தான் ஒரு மாத காலம் வீட்டில் ஓய்வு எடுத்த போது தான் என்ன செய்தேன் என அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பேசினார். அதாவது அந்த ஒரு மாத காலமும் எனக்கு கால் வலி இருந்தாலும், வலியோடு சேர்ந்து மகிழ்ச்சியான விஷயம் என்றால் அது, அந்த ஒரு மாத காலமும் மொத்தம் 90 படங்கள் பார்த்தேன்" எனக் கூறினார்.

Kamalhaasan Kamalhaasan Throwback Kamalhaasan Speech

வெறி: கமல்ஹாசனின் இந்தப் பேச்சைக் கேட்ட ரசிகர்களும் இணையவாசிகளும், உண்மையிலேயே, கமல்ஹாசன் ஒரு சினிமா பல்கலைக்கழகம்தான். அதனால்தான் தன்னை ஓய்வு எடுக்கச் சொன்ன போதும் கூட, ஒரு மாதத்தில் 90 படங்கள் பார்த்துள்ளார். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் அவரை உலக நாயகன் எனக் கூறுவது சரிதான் போல, கமல்ஹாசன் உண்மையில் பெரும் சினிமா காதலராக உள்ளார், சினிமா மீது அவருக்கு இருக்கும் அபரிமிதமான காதல், அவருக்கு அடங்காத வெறியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர். கமல்ஹாசனின் இந்த பேச்சு தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X