Karthik Birthday - ஷூட்டிங்கிற்கு ஏன் லேட்டா வருவேன் தெரியுமா?.. நவரச நாயகன் கார்த்திக் பகிர்ந்த ரகசியம்

சென்னை: Karthik Birthday (கார்த்திக் பிறந்தநாள்) நவரச நாயகன் கார்த்திக் இன்று தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து ஒரு சுவாரஸ்யத்தை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முத்துராமனுக்கு மகனாக பிறந்தவர் கார்த்திக். தந்தை பெரிய நடிகர் என்பதால் அவருக்கும் சினிமா மீது இயல்பாகவே ஆசை வந்துவிட்டது. நியூ காலேஜில் கல்லூரி படிப்பை முடித்த சிறு வயதிலிருந்தே சில்வர் ஸ்பூன் குழந்தையாக வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik is celebrating his 63rd birthday today Let us see an interesting thing about him

சினிமாவில் அறிமுகம்: சினிமா மீது ஆர்வம் இருந்த கார்த்திக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். 1981ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில்தான் ராதாவும் நடிகையாக அறிமுகமானார் என்பது நினைவுகூரத்தக்கது. முதல் படத்திலேயே கார்த்திக் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு மாநில அரசை விருதை அசத்தினார் கார்த்திக்.

தொடர் ஹிட்டுகள்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கார்த்திக்குக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதன்படி அவர் நடித்த அதிசய பிறவிகள், ஆகாய கங்கை, ரஜினியுடன் நடித்த நல்லவனுக்கு நலல்வன், நல்லதம்பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கும் அவர் வந்துவிட்டார். மேலும் சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.

மணி கூட்டணி: கார்த்திக்கின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மௌன ராகமும், அக்னி நட்சத்திரமும் ஆகும். மௌன ராகத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே நடித்திருதாலும் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக். அதிலும் மிஸ்டர் சந்திரமௌலி என்று பூர்ணம் விஸ்வநாதனை அவர் கூப்பிடும் காட்சி எப்போதும் அழிக்க முடியாத க்ளாசிக். அதேபோல் அக்னி நட்சத்திரம் படத்திலும் தான் இரண்டாம் தாரத்தின் மகன் என்ற உணர்வில் அவர் நடித்திருந்த நடிப்பு பெரும் அப்ளாஸை அள்ளியது.

90களிலும் கலக்கிய கார்த்திக்: 80களில் மட்டுமின்றி 90களிலும் கலக்கினார் கார்த்திக். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் அந்தப் படத்தில் கவுண்டமணியுடன் கார்த்திக் அடித்த லூட்டிகள் இப்போதும் சிரிப்பு வரவைக்கக்கூடியவை. சத்யராஜுக்கு பிறகு கவுண்டமணியுடன் பக்காவாக செட் ஆன நடிகர் என்றால் அது கார்த்திக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் அரசியல் கட்சியையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Karthik is celebrating his 63rd birthday today Let us see an interesting thing about him

விமர்சனம்: கார்த்திக்கின் நடிப்பில் இயல்புத்தனமும், துறுதுறுப்பும் எப்போதும் இருக்கும். இதன் காரணமாக அவர் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்டார். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் புகழடைந்தாரோ அதேபோல் விமர்சனங்களையும் சந்தித்தார். கார்த்திக் சிறந்த நடிகர்தான். ஆனால் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வரமாட்டார் என்பதுதான் அவர் சந்தித்த விமர்சனத்திலேயே பெரிய விமர்சனம். ஆனால் எதற்காக தான் லேட்டாக ஷூட்டிங் செல்வேன் என்பது குறித்து ஒரு மேடையில் ஜாலியாக அவரே சொல்லியிருக்கிறார்.

முதல் வசனம்: அதாவது அவரின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் நடித்த முதல் காட்சியே ராதா அவரை பார்த்து ஏன் லேட் என்று கேட்பது போன்றும் அதற்கு கார்த்திக் பதில் சொல்வது போன்றுதானாம். இதனையடுத்து தன் மீது விமர்சனம் வந்தபோதெல்லாம் யோவ் நான் நடிச்ச முதல் படத்தின் முதல் காட்சியே நான் லேட்டாக வருவது போன்றதுதான். அதனால்தான் லேட்டாக வருகிறேன் என ஜாலியாக கலாய்த்துவிடுவாராம். கார்த்திக் எப்போதுமே ஜாலியான ஆள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனது மகன் கௌதமிடமும் அவர் படு ஜாலியாக பேசுவார் என்பது கவனிக்கத்தக்கது. அப்படி ஜாலியான சிறந்த நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கிற்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X