Dhanush Sister - தனுஷின் அக்கா இப்படி இருப்பதற்கு அந்த நடிகர்தான் காரணம் - உண்மையை சொன்ன கஸ்தூரி ராஜா

சென்னை: Dhanush Sister (தனுஷின் அக்கா) நடிகர் தனுஷின் இரண்டாவது அக்கா குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா பகிர்ந்திருக்கும் தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரையில் பிறந்த விஜயகாந்த்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை வர சென்னைக்கு வந்துவிட்டார். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

விஜயராஜ் டூ விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார் விஜயகாந்த். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Kasthuri Raja Shares About Vijaykanths Helping Mind

டாப் ஹீரோவான விஜயகாந்த்: தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார்.

அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.

உதவிய விஜயகாந்த்: விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Kasthuri Raja Shares About Vijaykanths Helping Mind

முழு ஓய்வு: சூழல் இப்படி இருக்க தாங்கள் வளர்ந்துவிட்ட பிறகு தங்களது அலுவலகத்தில் எந்நேரமும் பலருக்கு சாப்பாடு கொடுத்து அவர்களின் பசியாற்றியவர்கள் இருவரும். இருவரில் இப்ராஹிம் ராவுத்தர் இறந்துவிட, விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் முழு ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும், திரையுலகினரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

தனுஷ் அக்காவின் அழுகை: இந்நிலையில் நடிகர் தனுஷின் இரண்டாவது அக்காவுக்கு விஜயகாந்த் உதவிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. மருத்துவத்திற்கு தேர்வு எழுதிய தனுஷின் அக்காவுக்கு கட் ஆஃபில் இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அவரது அக்கா வீட்டில் உட்கார்ந்து ஓயாமல் அழுதுகொண்டே இருந்தாராம்.

விஜயகாந்த் என்ட்ரி: இந்தச் சூழலில் விஜயகாந்த் திடீரென வந்தாராம். வந்தவர், என்ன பாப்பா அழுகுது என்று கேட்டிருக்கிறார். கஸ்தூரி ராஜா நடந்ததை சொல்லியிருக்கிறார். இதனையடுத்து கஸ்தூரி ராஜாவை கையோடு அழைத்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரிக்கு சென்று மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தாராம். உதவி என்று யாரேனும் ஒருவர் வந்தால் ஒதுங்கி செல்லும் சமூகத்தில் விஜயகாந்த் அவ்வளவு உதவியிருக்கிறார் என கஸ்தூரி ராஜா இந்த நிகழ்வை குறிப்பிட்டு ஒரு மேடையில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X