சிகரெட் வாங்கிக் கொடுத்ததை கூட ரஜினி இன்னும் மறக்கவில்லை.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் பாபா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து காணலாம்.
வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்க; சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே வேட்டையன், கூலி ஆகிய இரண்டு படங்களையுமே அவரது ரசிகர்கள் உச்சக்கட்டமாக எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் கவிதாலயா கிருஷ்ணன் ரஜினிகாந்த் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

கிருஷ்ணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "பாபா படத்தில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்துக்கு ரஜினிதான் என்னை பரிந்துரை செய்து நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அவர் என்னை சந்தித்தபோது, உங்களுக்கான சம்பளம் சரியாக இருந்ததா, சாப்பிட்டீர்களா என்றெல்லாம் விசாரித்தார். மேலும் வேறு ஏதாவது வேண்டுமா நீங்கள் மதுவும் அருந்தமாட்டீர்கள் வேறு எதுவும் வேண்டுமானால் கேளுங்கள் என்றார். நான் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, உங்களுடன் ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.
ஷூட்டிங் முடியட்டும்: அதற்கு ரஜினியோ சரி ஷூட்டிங் முடிந்த பிறகு எடுப்போம் என்று சொல்லிவிட்டு சென்றார். இந்த விஷயம் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசருக்கு தெரிந்தது. அவர் நேராக வந்து என்னிடம் நீங்கள் ரஜினியுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னீர்களா என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று சொன்னேன். அதற்கு அவரோ, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. நீங்கள் எப்படி அப்படி கேட்கலாம். நீங்கள் வீட்டுக்கு கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஃபோட்டோ எடுத்தேன்: ஷூட்டிங் முடிந்த பிறகு நான் சொன்னது ரஜினிக்கு நியாபகம் வந்துவிட்டது. அதேசமயம் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் விஷயத்தை நான் ரஜினியிடம் சொல்லிவிட்டேன். உடனே அவரை அழைத்த ரஜினி, நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் என கேட்டார். அதற்கு அவர், அது விதியாக இருக்கிறது சார் என்று சொன்னார். அதற்கு ரஜினியோ அந்த விதியை போட்டதே நான். அதை உடைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி என்னுடன் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்.
மறக்காத ரஜினி: புகைப்படம் எடுக்க போகும்போது எனது தோள் மீது கை போடுங்கள் கிருஷ்ணன் என்று சொன்னார். நான் உடனே எப்படி சார் உங்கள் மீது நான் கை போடுவது என்று கேட்டேன். அதற்கு ரஜினியோ, உங்களை எனக்கு எத்தனை வருடங்களாக தெரியும். எனக்கு நீங்கள் சிகரெட்டெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள். என்ன மறந்துவிட்டீர்களா என்று கேட்டபடி புகைப்படம் எடுத்துக்கொண்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











