அவங்க அப்படித்தான் சொல்வாங்க.. கவலையில்லை.. கீர்த்தி சுரேஷ் பற்றி தாய் மேனகா ஓபன் டாக்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை சில நாட்களுக்கு முன்பு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் அந்தத் திருமணம் நடந்தது. இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான அவர் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். இருந்தாலும் இடையில் அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. முக்கியமாக தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க மாமன்னன் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்த அவர்; அடுத்தடுத்து படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் பெரிதாக போகவில்லை.

keerthy suresh menaka

காதல்: இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து கிசுகிசுக்கள் பரவின. அவர் அனிருத்தை காதலிக்கிறார் என்று முதலில் வதந்தி பரவியது. அதன் பிறகு கேரளாவில் ஒரு தொழிலதிபரை காதலிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு அவர் பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை. அதேசமயம் அவரது தந்தை சுரேஷ் ஒரு பேட்டியில், 'தங்கள் மகளை பற்றி இப்படி வதந்திகள் வருவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

அறிமுகப்படுத்திய கீர்த்தி: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி அவரது பள்ளி காலத்திலிருந்து பழக்கத்தில் இருந்த ஆண்டனி தட்டில் என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். மேலும் கோவாவில் வைத்து எங்களது திருமணம் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், 15 வருடங்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்துவருகிறாரா என்று உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தனர்.

கோவாவில் திருமணம்: கீர்த்தி சுரேஷ் அறிவித்தபடியே கடந்த 12ஆம் தேதி அவருக்கும் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினரும், விஜய், திரிஷா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களின் திருமணம் ஹிந்து முறைப்படியும் பிறகு கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாய் பேட்டி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா ஒரு பேட்டியில், "கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் Chubbyயாக இருந்தார். அப்படி இருந்தால் Chubbyயாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். உடல் எடையை குறைத்தால் அய்யோ உடல் எடையை குறைத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நம்மால் வாழ முடியாது. நமக்காகத்தான் வாழ வேண்டும். மிஸ் இந்தியா படத்தில் நடிக்கும்போதுதான் அவர் ஒல்லியாக மாறினார். அப்போதும்கூட உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அவர் குறைக்கவில்லை. ஹைதராபாத்தில் அவருக்கு உணவு ஒத்துக்கொள்ளவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X