பாம்பு இருந்தா என்ன?.. போய் நடிடா.. கென்னை மிரளவிட்ட அசுரன் வெற்றிமாறன்.. இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக முதல் பாகம் போன்று இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அசுரன் பட சமயத்தில் நடந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
வெற்றிமாறன் என்றாலே சிறந்த இயக்குநர் என்ற பெயர் பெற்றவர். அவரது படங்களுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தை முதன்முறையாக இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அவர். அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. முக்கியமாக ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தேசிய விருதுகளை அள்ளியது.

விமர்சனம்: வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலும் விமர்சனத்தை சந்திக்காது. ஆனால் வடசென்னை படம் அதற்கு விதி விலக்காக அமைந்தது. பெரும்பாலானோருக்கு அந்தப் படம் பிடித்திருந்தாலும் ஒருதரப்பினரோ; வடசென்னை மக்களை வெற்றிமாறன் மோசமாக சித்தரித்துவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போதும் அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கு ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.
விடுதலை 2: அவரது இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் மெகா ஹிட்டானது. சூழல் இப்படி இருக்க விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாகம் எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. ரசிகர்களும் ஆவலோடு அந்தப் படத்துக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். படமானது டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
அசுரன்: இதற்கிடையே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்தது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து அந்தப் படத்தில் வெற்றிமாறனின் இன்புட்ஸ் நிறையவே இருந்தது. முக்கியமாக பஞ்சமி நிலம் பற்றிய விவாதங்கள் எல்லாம் அசுரனுக்கு பிறகுதான் சமூகத்தில் கிளம்பியது. அந்தப் படமும் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனை கொன்று ஒரு மரத்தில் தொங்க விடுவார்கள். அந்த சீனை எடுக்கும்போது கென் கருணாஸை ஒரு காட்டுக்குள் அமர்ந்து அந்த கொலையை பார்ப்பது போன்று சீனை யோசித்தாராம் அவர். அதனையடுத்து அந்தக் காட்டுக்குள் அமர்ந்துகொள்ள சொன்னாராம் வெற்றி. அந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தில்தான் கட்டுவிரியன் பாம்பு இருந்ததாக சொன்னார்களாம். இதன் காரணமாக பயந்தபடி நின்றாராம் கென். இதனை தெரிந்துகொண்ட வெற்றிமாறனோ, பாம்பு இருந்தா என்னடா உள்ள போய் உட்காரு என்று சொல்லிவிட்டு நேராக சென்று ஒரு கம்பை எடுத்து பாம்பை தூரமாக வீசினாராம். இதனை கென் கருணாஸ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











