Kiara Advani: 18+ படங்களுக்கு தடையால் கியாரா அத்வானி வேதனை.. இப்படி பட்டுனு பேசிட்டாங்களே!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தொடர்பான கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழமையான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கியாரா அத்வானி சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமானவை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை ஒட்டி இந்த வீடியோ இணையவாசிகளால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
2015ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஊடகத்தினருடன் கியாரா அத்வானி பேசியபோது இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். “அரசு முதலில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதித்தது, பின்னர் ஆபாசப் படங்களுக்கும் தடை விதித்தது. அடுத்து எதற்கு தடை விதிக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த முடிவுகள் ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தத்தையே பறிக்கின்றன” என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். இது சென்சார் மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து அவர் பேசியதின் ஒரு பகுதியாகும்.

அவர் தனது பேச்சில், "முதலில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது, இப்போது ஆபாசப் படங்களுக்கு. அடுத்து என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இது ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தத்தைப் பறிப்பதாக நான் நினைக்கிறேன்" என்று அழுத்தமாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் மீண்டும் பேசுபொருளாகி, சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளன.
எதிர்ப்பு: இந்த வீடியோ கிளிப் வைரலானதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இணையவாசிகளின் கருத்துக்கள் இருவிதமாகப் பிரிந்துள்ளன. சில இணையவாசிகளோ, கியாராவின் இந்தக் கருத்துக்களை 'தேச விரோதமானது' என்றும், 'சமூகத்தின் மீது அக்கறையற்றது' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவரது கருத்துக்களின் தன்மையைச் சந்தேகித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஆதரவு: அதேவேளையில், கியாரா அத்வானியின் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கியாரா பேசியது சரி, ஒருவரின் தனிப்பட்ட தேர்வை, தேவையை அரசு முடக்குவது என்பது இந்தியா போன்ற குடியரசு நாட்டில் அதன் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகுகிறது என்று பதிவிட்டு வருகிறார்கள். கியாரா இவ்வாறு பேசியது 10 வருடங்கள் பழமையான வீடியோ என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அன்றைய காலகட்டத்தின் சமூக-அரசியல் சூழலில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்களை இன்றைய பார்வையுடன் அணுகக் கூடாது என்று வாதிடுகின்றனர். கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











