கடன் கேட்ட நடிகை கிரண்.. படுக்கைக்கு அழைத்த காம கொடூரர்கள்.. கவர்ச்சி வீடியோக்களுக்கு காரணம் என்ன?

சென்னை: நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகிய அவர் அதன் பின்னர் அவ்வப்போது சில கிளாமர் பாடல்களுக்கு மட்டும் நடனமாடிக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் தற்போது தனது எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு என தனி வலை தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இப்படி இருக்கையில் அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " நான் ஜெமினி படத்தின் மூலம் ஓவர் நைட்டில் நான் பெரிய ஸ்டாராக மாறிவிட்டேன். பலரது கவனத்தை ஈர்த்து விட்டேன். அதனால் எனக்கு எனது சினிமா வாழ்க்கையில் எனக்கான இடத்தைப் பிடிப்பது பெரிய சவாலானதாக மாறவில்லை.

Kiran Rathore Opens Up on Struggles Financial Crisis and Comeback Attempts in Tamil Cinema - Throwback
Photo Credit:

சோக கதை: அதேபோல், ஒரு கட்டத்தில் நான் எனது காதலரை திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழவேண்டும் என்று நினைத்து, சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி நின்றேன். இப்படி இருக்கையில் அது நடக்காமல் போனது. அதன் பின்னர் நான் மீண்டும் நடிக்கலாம் என்று சினிமாவில் முயற்சி செய்தேன். அப்போது என்னை மற்றவர்கள் எல்லாம் ஒரு செட் பிராப்பர்ட்டி போலத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் சுந்தர் சி அண்ணன் மட்டும் தான் ஆம்பள படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். அதேபோல் சில படங்களில் எல்லாம் வெறும் காசுக்காக மட்டும் நடித்துள்ளேன்.

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்: கொரோனா காலத்தில் தான் நான் இந்த கிளாமர் புகைப்படங்கள் பதிவிட ஆரம்பித்தேன். நான் அப்போது மிகவும் கடினமான பண நெருக்கடியில் இருந்தேன். அப்போது எனது நண்பர்கள் சிலரிடம் பணம் கடனாக கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை படுக்க அழைத்தார்கள். எனக்கு அது மிகவும் வலியைக் கொடுத்தது. அதில் இருந்து தான் நான் கிளாமர் புகைப்படங்களை அதிகம் பகிர ஆரம்பித்தேன். நான் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறேன். அதன் மூலம் எனக்கு பணம் வருகிறது. ஆனால் முன்னணி நடிகைகளும் தான் அவர்கள் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பகிர்கிறார்கள். ஆனால் அது தொடர்பாக அவர்களை நோக்கி யாரும் கேள்வி எழுப்புவது இல்லை.

Kiran Rathore Opens Up on Struggles Financial Crisis and Comeback Attempts in Tamil Cinema - Throwback
Photo Credit:

மூன்று கல்யாணம்: ஊடகங்களில் எனக்கு மூன்று முறை திருமணம் ஆகிவிட்டது என்றும் மூன்று குழந்தைகள் உள்ளது என்றும் எல்லாம் கூறுகிறார்கள். நானும் அந்த மூன்று கணவர்களையும் மூன்று குழந்தைகளையும் தேடுகிறேன். தேடிக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் எனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த கிரணுக்கு இப்படி ஒரு சோகம் நடைபெற்றதா என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X