படையப்பா படத்தில் ஊஞ்சல் சீன்.. ஹாரிஸ் ஜெயராஜ் செய்த தரமான சம்பவம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. ஒட்டுமொத்த இந்திய திரை உலகிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் சம்பாதித்து இருந்தது. ஆனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதற்கிடையே படையப்பா திரைப்படம் கடந்த 12ஆம் தேதி ரீ ரிலீஸும் ஆனது.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவருக்கென்று மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். 70 வயதுக்கு மேலானாலும் இன்றுவரை படு சுறுசுறுப்பாகவும், பிஸியாகவும் நடித்துவருகிறார் ரஜினி. அவரது சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கூலி ரஜினி: அவரது நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், அமீர்கான், ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம் என பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சம்பாதித்திருந்தது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து ஆயிரம் கோடி க்ளப்பில் சேர்ந்த முதல் தமிழ் ப்ட்ம் என்ற பெயரை பெறும் என்றும் திரைத்துறையினரும், ரசிகர்களும் உச்சகட்டமாக நம்பிக்கொண்டிருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

KS Ravikumar Shares Untold Story Behind Iconic Padayappa Scene After Re-Release
Photo Credit:

மோசமான தோல்வி: ஆனால் படமோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, கடுமையான ட்ரோல்களை சந்தித்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டையே அசைத்துப் பார்த்திருக்கிறது. கூலி படத்தில் புதுமையாக எதுவுமே இல்லை திரைக்கதையில் சொதப்பல், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் என படத்தில் பெரும் குறைகள் மட்டுமே இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் கூறினார்கள். விமர்சன ரீதியாகத்தான் இப்படி என்றால் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த கலெக்ஷனை படம் கொடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

ஜெயிலர் 2: இப்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் கோவை உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடந்துவருகிறது. ரஜினிகாந்த்தும் ஆர்வத்துடன் அதில் கலந்துகொண்டிருக்கிறார். கூலியில் விட்டதை கண்டிப்பாக இப்படத்தில் பிடிக்க வேண்டும் என்ற முழு உழைப்பில் படக்குழு உழைத்துவருகிறது. இதனை முடித்துவிட்டு கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

படையப்பா ரீ ரிலீஸ்: இதற்கிடையே அவரது நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆன படையப்பா திரைப்படம் கடந்த 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை ரிலீஸானபோது எப்படி பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதேபோல் ரீ ரிலீஸிலும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் படையப்பா படம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ரவிக்குமார் பேட்டி: தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "படையப்பா படத்தில் எல்லா சீன்களுக்கு ரஹ்மான் மியூசிக் போட்டு முடித்தாலும் அந்த ஊஞ்சல் சீனுக்கு மட்டும் பேலன்ஸ் இருந்தது.அப்போது அவரிடம் ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றிக்கொண்டிருந்தார். ரஹ்மான் வெளியே போயிருந்தபோது என்ன ஜெயராஜ் நாம் ட்ரை செய்யலாமா என்று கேட்டேன். உடனே அவரும் ஓகே சொல்லி; நானும் அவரும் அமர்ந்து ஓட்டி ஓட்டி பார்த்தோம். அதனையடுத்து டைட்டிலுக்கு போட்ட மியூசிக்கை இதில் போட்டால் என்ன என்ற ஐடியா எங்களுக்கு வர; அப்படியே போட்டோம். ரஹ்மான் வந்ததும் காண்பித்தோம். அவருக்கும் பிடித்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X