பட்டத்தை வேண்டாம் என்ற கமல் ஹாசன்.. விடாமல் டார்ச்சர் செய்த இயக்குநர்.. அப்போவே அப்படித்தான்
சென்னை: இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப் படம் வெளியாகிறது. மேலும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க தன்னை யாரும் இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் அவர். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கமல் ஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர், "என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமா உருவாக்கம்: சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.
கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதனால்தான் வேண்டுகோள்: இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். まあ மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி: கமல் ஹாசனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் உலக நாயகன் பட்டம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தெனாலி படத்தின்போதுதான் கமல் ஹாசனுக்கு உலக நாயகன் என்ற டைட்டிலை போட்டோம். அதற்கான அனுமதி கேட்டபோது அதெல்லாம் வேண்டாம் என்று அப்போதே மறுத்துவிட்டார்.
விடவில்லை: இருந்தாலும் நான் கமல் ஹாசனை விடவில்லை. அவரை டார்ச்சர் செய்து ஓகே வாங்கிவிட்டேன். டைட்டில் வீடியோவில் ஆழ்வார்பேட்டையில் தொடங்கி தமிழ்நாடு, இந்தியா, உலகம் தாண்டி இறுதியாக கமல் ஹாசனின் விழிகளில் முடியும் வகையில் தயார் செய்து உலக நாயகன் என்று டைட்டில் போட்டோம்" என்றார்.


Click it and Unblock the Notifications