ரஜினிகாந்த்துக்கு படையப்பா திரைப்படம் பிடிக்கவில்லையா?.. முதலில் பார்த்ததும் அவர் ரியாக்‌ஷன் இதுதானா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த திரைப்படம்தான் படையப்பா. கடந்த 1999ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். இப்போதுகூட அந்தப் படத்தை டவுன்லோட் செய்தோ இல்லை டிவியில் போடும்போதோ தவறாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியின் கரியரிலேயே மிக மிக முக்கியமான இடத்தை பிடித்த படங்களில் ஒன்று இது. ஒவ்வொரு சீனையும் கூஸ் பம்ப்ஸாகவே அமைத்திருந்தார்கள். இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில் படம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் 90ஸ் கிட்ஸின் பேவரைட்டாக இன்றுவரை திகழ்கிறது. ரஜினிகாந்த்துக்கு எத்தனையோ படங்கள் மைல் ஸ்டோனாக அமைந்திருக்கின்றன. அப்படித்தான் இந்தப் படமும். படத்தின் ஒவ்வொரு சீனிலும் கூஸ் பம்ப்ஸ் மெட்டீரியலை வைத்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு கொண்டு சென்றிருந்தார்கள். படையப்பா போல் எப்படியாவது ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று இப்போதைய நடிகர்கள்கூட ஏங்குவதுண்டு.

Throwback Stories Rajinikanth Padaiyappa

மெகா ஹிட் படையப்பா: அந்த அளவுக்கு அந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதுவரை ரஜினிகாந்த் பல படங்களை மெகா ஹிட்டாக கொடுத்திருக்கிறார். ஆனால் படையப்பா படம் அதையெல்லாம் தாண்டிய ஹிட்டாக அமைந்தது. ரஜினியின் ஸ்டைல், ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் என படையப்பா திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அமைந்தது. ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் சொன்ன விபரீதி ஐடியா; நிராகரித்த கமல்: படையப்பா படத்தை முழுவதுமாக படமாக்கி முடித்துவிட்டு பார்க்கும்போது அதன் ரன்னிங் டைம் மொத்தம் நான்கு மணி நேரமாக இருந்ததாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரஜினி படத்துக்கு மொத்தம் இரண்டு இடைவேளைகள் விடலாம் என முடிவெடுத்தார். ஆனால் அதில் ரவிக்குமாருக்கு உடன்பாடில்லை. எப்படி இந்த ஐடியாவிலிருந்து ரஜினியை பின்வாங்க வைப்பது என்று யோசித்த அவர்; நேராக கமல் ஹாசனிடம் சென்றார். உடனடியாக இந்த விபரீத ஐடியா எல்லாம் எப்போதும் ஒத்து வராது என்று ரஜினியிடம் பேசினார் கமல். அதுமட்டுமின்றி ரவிக்குமாரிடம் விட்டுவிடுங்கள்; அவர் பார்த்துக்கொள்வார் என்று கூற; ரன்னிங் டைம் வெகுவாக குறைக்கப்பட்டது.

படத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல்கள்: படையப்பா படத்தை பொறுத்தவரை ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் இருக்கின்றன. ஒருபக்கம் ரஜினியின் ஸ்டைல், பஞ்ச் டயலாக்குகள், மறுபக்கம் ரஹ்மானின் இசை, இன்னொரு பக்கம் செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரின் காமெடி என அனைத்தும் பக்காவாக இருந்தன. அதிலும் வீட்டை மணிவண்ணனுக்கே சிவாஜி கணேசன் எழுதி வைக்கும் இடமெல்லாம் இப்போது பார்ப்பவர்களைக்கூட கண் கலங்க வைக்கும். அந்த அளவுக்கு எமோஷனலையும் ரவிக்குமாரும், ரஜினிகாந்த்தும் படத்தில் கொடுத்திருந்தார்கள். ரஜினிகாந்த்தும் தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை அந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இப்படி ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் படத்தில் இருந்தாலும் படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள், நடிகைகள் அவர்கள் நடித்த விதம் முக்கியத்துவமானது.

சிவாஜிக்கு ஒருகோடி சம்பளம்: முக்கியமாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படும் சிவாஜி கணேசனின் கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாஜி கணேசன் படையப்பா படத்தில் நடிக்கும்வரை அதிகபட்ச சம்பளமாக 20 லட்சம் ரூபாயைத்தான் பெற்றிருக்கிறார். எனவே படையப்பா படத்துக்கும் லட்சங்களில்தான் சம்பளம் கிடைக்கும் என நினைத்திருந்த சிவாஜிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கோடி ரூபாயை சம்பளமாக தர சொன்னது ரஜினிகாந்த் என்பதும், அதுதான் சிவாஜி கணேசன் முதலும் கடைசியுமாக ஒரு கோடி சம்பளம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சம்பள செக்கை பார்த்ததும் ஒரு பூஜ்ஜியத்தை அதிகமாக போட்டிருக்கிறார்கள் போல என சிவாஜி அசால்ட்டாக நினைத்த சம்பவமெல்லாம் இந்தப் படத்தில்தான் அரங்கேறியது.

நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன்: சிவாஜி கணேசன் போலவே படத்துக்கு இன்னொரு பலமாக இருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இப்போது வேண்டுமானால் ராஜமாதா கேரக்டர் மூலம் ரம்யா கிருஷ்ணன் அடையாளப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு முதல் அடையாளம் பெற்றுக்கொடுத்தது என்றால் படையப்பா படத்தில் அவர் ஏற்றிருந்த நீலாம்பரி கதாபாத்திரம். ரஜினி ஸ்க்ரீனில் இருக்கும்போது ஒருவர் தன் மீது ரசிகனின் கவனத்தை திருப்புவது கடினம். ஆனால் அதை ரம்யா கிருஷ்ணன் அசால்ட்டாக செய்தார். படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் எல்லாம் ரம்யா கிருஷ்ணனை திட்டி தீர்த்ததும், அடிக்க பாய்ந்ததும் நடந்தது. அதுமட்டுமின்றி பட ரிலீஸ் அன்று அவர் தமிழ்நாட்டையும் காலி செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

நீலாம்பரியாக நடிக்க வேண்டியது மீனா: நீலாம்பரி கேரக்டரில் முதலில் மீனாதான் நடிக்க வேண்டியது. ஆனால் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்று ரஜினி - மீனா. இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அப்படி இருக்கும்பட்சத்தில் ரஜினிக்கு வில்லியாக மீனா நடித்தால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் வந்ததால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ரவிக்குமாரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நீலாம்பரி கேரக்ட்ரை நான் மிஸ் செய்திருக்கவேகூடாது. அப்படி மிஸ் செய்தது அது காஸ்ட்லி மிஸ் என்று மீனாவும் ஒரு விழா மேடையில் ஓபனாகவே ஒத்துக்கொண்டிருந்தார்.

ஜெயலலிதா இன்ஸ்பிரேஷன்: இதற்கிடையே நீலாம்பரி கேரக்டரை உருவாக்குவதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என்றும் ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். அதேசமயம் ரஜினிகாந்த்துக்கும், ஜெயலலிதாவுக்குமிடையே பாட்ஷா பட சமயத்தில் ஒரு மோதல் போக்கு நிலவிக்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சூழலில் அவரையே இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு கேரக்டரை உருவாக்கியதற்கு தனி கெத்து வேண்டும் என்று ரஜினியின் ரசிகர்கள் இன்னமும் சொல்வதுண்டு. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

கே. எஸ். ரவிக்குமார் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "படையப்பா படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பின்பு ரஜினிகாந்த் படத்தை பார்த்தார். அப்போது அவருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். படம் பார்ப்பதற்கு முன்னதாக அவர் என்னிடம், 'ஷோ முடிந்த பிறகு கெஸ்ட் ஹவுஸ் சென்று சாப்பிடலாம் என்று கூறியிருந்தார். ஆனால் படத்தை பார்த்து முடித்த பிறகு அவர் எதுவுமே படம் பற்றி சொல்லாமல் சென்றுவிட்டார். ரஜினிக்கு படம் பிடிக்கவில்லையோ என்று எனக்கு தோன்றியது. ஆனால் அடுத்த நாள் என்னை அழைத்து படம் மிகவும் பிடித்திருக்கிறது. நேற்று நண்பர்கள் எல்லாம் இருந்தார்கள். அவர்கள் முன் இப்படி சொன்னால் நம் படம் அதனால்தான் அப்படி சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்வார்கள். அதனால்தான் சொல்லவில்லை என்றார். பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது" என்று கூறினார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X