விஜயகாந்த்தை அசிங்கப்படுத்திய ஹிந்திக்காரர்கள்.. சண்டைக்கு சென்ற குஷ்பூ.. வேற லெவல் ப்பா
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் அவர் குறித்த நினைவுகளை அவரோடு பணியாற்றியவர்கள் பகிர்ந்துவருகிறார்கள். இந்தச் சூழலில் விஜயகாந்த்துக்காக நடிகை குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்து ரசிகர்களை உச்சக்கட்ட நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுகுறித்து இதில் பார்க்கலாம்.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வசதியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கலாம். ஆனால் சினிமா ஆசை கொண்டு சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டவர். அவர் சென்னையில் இறங்கும்போது அவருக்கு இரண்டே துணைகள்தான். ஒன்று திறமை துணையாக இருந்தது; இரண்டாவது அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் துணையாக இருந்தார். கரியரின் ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் பட்டு ஒருவழியாக ஹீரோவாகி மின்ன தொடங்கிவிட்டார்.

உதவும் குணம்: ஹீரோ ஆகிவிட்டால் பொதுவாக மற்றவர்களிடம் பழகுவதற்கு ஒரு வித தயக்கத்தை காட்டுவார்கள். ஆனால் விஜயகாந்த்தோ அப்படி இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு அடுத்ததாக பெரிய ஹீரோ என்றால் அது விஜயகாந்த்தான். அந்த நிலையில் இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதில் எந்த பந்தாவும் காண்பிக்காமல் ரொம்பவே எளிமையாக பழகினார். முக்கியமாக பலருக்கு பல உதவிகளை செய்தார்.
நட்சத்திரங்களுக்கும் உதவி: சாமானியர்களுக்கு மட்டுமின்றி இப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருக்கும் அவர்களது கரியரின் ஆரம்பத்தில் உதவி செய்தவர் விஜயகாந்த். அவர்கள் தவிர்த்து மன்சூர் அலிகான், போண்டா மணி, ஷாம் என அவர் உதவி செய்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அதனை அனைவருமே நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.
உடல்நலக்குறைவு: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த அவர் எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட துரோகங்களும், சறுக்கல்களும் விஜயகாந்த்துக்கு மன உளைச்சலை கொடுத்தது. அதோடு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. அதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி முழு ஓய்வில் இருந்தார். பிறகு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அவர் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சண்டைக்கு சென்ற குஷ்பூ: இந்தச் சூழலில் விஜயகாந்த்துக்காக நடிகை குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவில் ஃபெப்சி பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது ஹிந்தி திரையுலகத்திலிருந்து சிலர் வந்திருந்தார்களாம். அவர்களில் பலர் கடுமையாக பந்தா செய்துகொண்டிருந்தார்களாம். ஒருமுறை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விஜயகாந்த்தும், குஷ்பூவும் ஒரு விஷயமாக சென்றிருக்கிறார்கள்.
அசிங்கப்படுத்தப்பட்ட விஜி: அப்போது விஜயகாந்த்தை பார்த்து அவர்கள், 'இவன்லாம் ஒரு ஹீரோவா' என்று ஹிந்தியில் நக்கல் செய்து சிரித்திருக்கிறார்கள். மேலும் விஜயகாந்த் அமர்வதற்கு நாற்காலியும் போடவில்லையாம். இதனைப் பார்த்த குஷ்பூ அவர்களிடம் சண்டைக்கு சென்றுவிட்டாராம். ஆனால் விஜயகாந்த்தோ, நமக்கு காரியம்தான் முக்கியம். அமைதியாக இரு. அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேள் என கூறி அந்த சூழ்நிலையை சுமூகமாக கையாண்டாராம். இதனை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











